விமானத்தில் இலங்கை பயணி செய்த செயல்: அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

அவுஸ்திரேலியாவில் இருந்து புறப்பட்ட விமானம், வெடிகுண்டு பீதி காரணமாக, புறப்பட்ட சில நிமிடங்களிலே அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் விமானநிலையத்திலிருந்து, கோலாலம்பூருக்கு மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டது. அப்போது விமானத்தில் இலங்கையை சேர்ந்த பயணி ஒருவரிடம் வெடிகுண்டு இருப்பதாக தகவல் பரவியதைத் தொடர்ந்து, பயணிகள் கதிகலங்கினர்.
இதனால் விமானம் மீண்டும் மெல்போர்ன் விமான நிலையத்திலே அவசரமாக தரையிரக்கப்பட்டது.
இது குறித்து மலேசிய போக்குவரத்துத் துறை துணை அமைச்சர் Abdul Aziz Kaprawi கூறுகையில், இது ஒரு விமான கடத்தல் முயற்சி இல்லை. அவர் தீவிரவாதியும் இல்லை. பயணி ஒருவர், விமானிகளுக்கு இடைஞ்சல் அளிக்கும் விதமாக விமானிகளின் அறைக்குள் நுழைய எத்தனித்திருக்கிறார்.
இதையடுத்து தரையிறக்கப்பட்ட விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, குறிப்பிட்ட இலங்கை பயணியிடம் சோதனை நடத்தப்பட்டது.

சோதனையில் அந்த பயணியிடம் வெடிகுண்டு ஏதும் இல்லை. மாறாக ஒரு பவர்பாங்க் மட்டும் இருந்திருக்கிறது. அந்த பயணி குடிபோதையில் விமான பணியாளர்களிடம் தகராறு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
பயணிகளுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் செயல்பட்டதால் இலங்கை பயணியை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News ,

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.