இலங்கை அணிக்கு பின்னடைவு : நட்சத்திர வீரர் சாம்பியன் டிராபி தொடரில் சந்தேகம்

இலங்கை அணியின் தலைவரான மேத்யூஸ் காயம் காரணமாக சாம்பியன் டிராபி தொடரில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடுவது சந்தேகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் இன்று முதல் சாம்பியன் டிராபி தொடர் நடைபெற உள்ளது. இதற்காக எட்டு அணிகள் பங்கேற்கவுள்ளன.
இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியும், வங்கதேச அணியும் மோதுகின்றன.
இந்நிலையில் இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரரும், தலைவருமான மேத்யூஸ் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இலங்கை அணி விளையாடும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடுவது சந்தேகம் என தெரிவித்துள்ளது.
மேத்யூஸ் கடந்த ஜனவரி மாதம் முதலே காயங்கள் காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் ஓய்வு எடுத்து வந்தார். அதன் பின்னர் திரும்பிய மேத்யூஸ் இந்தியாவில் நடைபெற்ற ஐபில் போட்டியின் கடைசி லீக்கில் ஆடினார்.
அதைத் தொடர்ந்து இங்கிலாந்து சென்ற அவர் அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 95 ஓட்டங்கள் குவித்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வேலையில் மேத்யூசிற்கு காயம் ஏற்பட்டிருப்பது இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
காயம் ஏற்பட்டுள்ளதால், மேத்யூசிற்கு பதிலாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் போட்டியில் இலங்கை அணியை உபுல் தரங்கா வழி நடத்திச் செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.