பொலிஸாரால் தேடப்பட்டு வரும் ஞானசார தேரர் விவகாரத்தில் நல்லாட்சி அரசின் மெத்தனப்போக்கை சுட்டிக்காட்டி இலங்கையின் பிரபல முஸ்லிம் அமைப்பான தவ்ஹீத் ஜமபாஅத்தின் தலைவர் மவ்லவி. ரஸ்மின் அவர்கள் தனது முகநூலில் இன்று வெளியிட்ட பதிவை உங்கள் பார்வைக்காக வழங்குகின்றோம்.
நல்லாட்சியின் காட்டாட்சி!
நல்லாட்சியின் காட்டாட்சி!
===================
போலிசாரால் தேடப்படும் குற்றவாளி ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெரும் (?) அதிசயம் இலங்கையில் மட்டும் தான் நடக்கிறது.
இனவாத குற்றச் சாட்டில் 04 போலிஸ் குழுக்களால் தினமும் சல்லடை போட்டு தேடப்பட்டுக் கொண்டிருக்கும் (?) ஞானசாரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அவருடைய சட்டத்தரணி நீதி மன்றத்தில் நேற்று (31.05.2017) தெரிவித்துள்ளார்.
நீதி மன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் நேற்றைய வழக்கில் ஆஜராக வேண்டிய ஞானசாரர் மன்றில் நேற்று ஆஜராக வில்லை. அவருடைய சட்டத்தரணியூடாக தான் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக அறிவித்துள்ளார்.
ஆனால், இனவாதத்தை தூண்டிய குற்றச்சாட்டில் இவரைத் தான் 04 போலிஸ் குழுக்கள் கைது செய்ய தேடி அலைகிறார்களாம்.
இதனையும் நாட்டு மக்கள் நம்ப வேண்டும் என்று நல்லாட்சி (?) விரும்புகிறது.
உலகிலேயே இது போன்ற காமடியெல்லாம் மைத்திரியின் நல்லாட்சியில் தான் நடைபெறுகிறது.
04 குழுக்கள் ஞானசாரரை தேடுகிறதென்றால், குறித்த வைத்தியசாலைக்கே சென்று அவரை சந்திக்கலாமே? ஏன் செய்யவில்லை?
தேடுகிறோம் என்று போலிஸ் சொல்வதையும் நாட்டு மக்கள் நம்ப வேண்டும்.
ஞானசாரர் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகிறார் என்பதையும் நாட்டு மக்கள் நம்ப வேண்டும்.
ஏனென்றால் அது தான் நல்லாட்சி????
Post a Comment