இன்று முதல் அஞ்சல் அலுவலகங்களில் நீர்க் கட்டணம் செலுத்தலாம்

எந்தவொரு அஞ்சல் அலுவலகத்திலும் இன்று முதல் நீர்க் கட்டணத்தை செலுத்த முடியும் என தேசிய நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.
இலங்கை முழுவதிலும் காணப்படும் 4610 அஞ்சல் அலுவலகங்களில் நீர்க் கட்டணத்தை செலுத்த முடியும்.
நீர்க் கட்டணத்தை அஞ்சல் அலுவலகங்களில் செலுத்துவதற்காக ஐந்து ரூபா தரகுக் கட்டணம் ஒன்றை செலுத்த வேண்டும்.
இதன் மூலம் 10 ரூபாவினை வாடிக்கையாளர்கள் சேமிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
நீர்க் கட்டணங்களை செலுத்துவதற்காக வாடிக்கையாளாகள் இதுவரையில் 15 ரூபாவினை தரகுப் பணமாக செலவிட நேரிடுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்து ரூபா தரகு அடிப்படையில் நீர்க் கட்டணத்தை அறவீடு செய்து கொள்ள அஞ்சல் திணைக்களத்திற்கும் நீர் வழங்கல் சபைக்கும் இடையில் உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.