குறித்த காலக் கெடுவில் சரணடையாத 4000 படையினர் அதிரடியாக கைது

பொது மன்னிப்புக் காலத்தில் சரணடையாத சுமார் 4000 படையினரை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
படைத் தரப்பில் கடமையாற்றி உரிய முறையில் அனுமதியின்றி சேவையை விட்டு விலகியவர்கள், அனுமதியின்றி விடுமுறை பெற்றுக் கொண்டவர்கள் உள்ளிட்டவர்கள் முறையாக விலகிக் கொள்ள பொது மன்னிப்புக் காலம் வழங்கப்பட்டிருந்தது.
இந்த பொதுமன்னிப்புக் காலத்தைப் பயன்படுத்தி உரிய முறையில் படைகளிலிருந்து விலகிக் கொள்ளத் தவறியவர்களே தற்போது கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
நேற்று வரையில் முப்படைகளையும் சேர்ந்த 3896 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்…
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1ம் திகதி தொடக்கம் 31ம் திகதி வரையில் பொதுமன்னிப்புக் காலம் வழங்கப்பட்டிருந்தது.
இந்தக் காலப்பகுதியில் சுமார் 42000 படையினர் சட்ட ரீதியாக சேவையிலிருந்து விலகிக் கொண்டுள்ளனர்.
இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற சுமார் 38000 படையினர் இன்னமும் முறையாக படைகளிலிருந்து விலகிக் கொள்ளவில்லை.
இவ்வாறு இராணுவத்திலிருந்து தப்பியோடிய படையினரை கைது செய்யும் நடவடிக்கைகள் கடந்த ஆறு மாத காலமாக மேற்கொள்ளப்பட்டன.
மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் அடிப்படையில் சுமார் 4000 பேர் இதுவரையில் கைது செய்பய்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.