சமூக சீரழிவை உருவாக்கும் சில உறவு முறைகள் (சிறப்புக் கட்டுரை)

யாரையும் புண் படுத்தவோ யாரையும் கேவலப்படுத்தவோ அல்ல இந்த கட்டுரை மாறாக நம் சமூகம் சீரழிந்து விடக்கூடாது என்ற ஒரே ஒரு உயரிய நோக்கமே ஒழிய வேறு இல்லை

முஸ்லிம் சமூகத்திற்கு இஸ்லாம் அனைத்திலும் வழிகாட்டி இருக்கின்றது அதில் மிக முக்கியமான ஒரு பகுதி தான் ஒழுக்கம்

இன்று நம்முடைய முஸ்லீம் சமூகம் இந்த ஒழுக்க விடயத்தில் பலவிதமான கோட்டைகளை விடுகிறார்கள் 

ஆடையில் இருந்து ஆண் பெண் கலப்பு வரை ஏறாளம் அடுக்கி கொண்டே போகலாம் 

ஆனால் அதில் மிக முக்கியமாக கவனிக்கத்தவறிய நிறைய உலமாக்ககளால் கூட உபதேசம் பன்னாத ஒரு பகுதி உள்ளது 

அதை பற்றி தான் இந்த தொடர் கட்டுரையில் விளக்க உள்ளேன் இன்ஷா அல்லாஹ் சிந்தித்து முடிவெடுக்கவும்

 மச்சான் மைனி/மதினி உறவு 
==========================

இந்த உறவு எப்படி இருக்க வேண்டும் என்று இஸ்லாம் நமக்கு வழிகாட்டி உள்ளது

ஒரு ஆணுக்கு மதினிகளாக இருப்பவர்கள் பலவகை படுவார்கள் அதே போன்று ஒரு பெண்ணுக்கு மச்சான்களாக இருப்பவர்களும் பலவகை படுவார்கள்

சிலர் திருமணம் முடிக்க தற்காலிகமாக தடுக்கப்பட்ட உறவாக இருக்கும் சிலர் அஜ்னபிகளாகவே மஹ்ரம் அல்லாதவர்களாகவே இருப்பார்கள்

இப்படி எந்த முறையிலான உறவாக இருந்தாலும் இவர்களோடு நெருங்கி பழகுவது அதாவது ஒரு கூட பிறந்த சகோதரன்/ சகோதரியுடைய அந்தஸ்த்தில் பழகுவது கண்டிப்பாக சீர்கேட்டை உண்டுபன்னும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை

உதாரணமாக: ஒரு ஆண் தனது மனைவியின் சகோதரிகளோடு முக்கிய தேவைகள் அன்றி வேறு எந்த விதமான தொடர்பும் வைக்க முடியாது 

அதே போன்று ஒரு பெண் தனது கணவனின் சகோதரர்களோடு முக்கிய தேவைகள் அன்றி எந்த விதமான தொடர்பும் வைக்க முடியாது 

ஆனால் இன்று இந்த உறவு எப்படி பார்க்கப்படுகிறது என்றால் அண்ணன் தங்கை உறவு போன்றும் 
அக்கா தம்பி உறவு போலும் தான் இன்று பார்க்க படுகின்றது இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயமே!

* எந்த அளவிற்கு என்றால் மச்சானும் மதினியும் ஒன்றாக மோட்டார் பைக்கில் போகிறார்கள் 

* தனிமையில் சகஜமாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள் 

* மச்சானுக்கு முன்னால் மதினி தனது ஆடை முறைமைய சர்வாசாதரணமாகவே தனது சகோதரன் என்ற நினைப்பில் பேனாமல் இருக்கிறார்கள்

* தனது சகோதரன் என்ற நினப்பில் தொட்டு விளையாடிக்கொள்கிறார்கள் 
(ஜோக் அடிக்கிறார்கள்)

* ஒரே வீட்டில் வசிப்பவர்கள் அதனால் பலவிதமான பிரச்சினைகளை சந்திக்கிறார்கள்

இது போன்று இன்னும் ஏறாளம் சொல்லலாம் ஒரு பெண் நினைக்கிறால் தனது மச்சான் தனது கூட பிறந்த சகோதரன் போல அல்லது தனது தந்தை போல என்று நினைக்கிறாள்

 இதனால் தான் இன்று ஏராளமான குடும்ப சீரழிவுகளை கண்கூடாக காண்கிறோம்

ஏனைய உறவுகளை விட இஸ்லாம் மிகவும் கண்டித்து சொல்லப்படுகின்ற ஒரு உறவு இருக்கும் என்றால் அது மச்சான், மதினி உறவு தான்

காரணம் சாதாரணமாக வேறு அந்நிய ஆண்களோடு பேசுவதற்கு பழகுவதற்கு பெற்றோர்கள் இடம் கொடுக்க மாட்டார்கள்

ஆனால் தனது சகோதரியின் கணவன் (மச்சான்) தானே
 பேசினால் என்ன? விளையாடினால் என்ன? ஒன்றாக பயணம் சென்றால் என்ன?

என்று அதை சர்வ சாதாரணமாகவே நினைக்கிறார்கள் இதனால் தான் மிக பாரதூரமான விளைவுகள் வருகின்றது

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கின்றேன்" என்று கூறினார்கள். 

அப்போது அன்சாரிகளில் ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?" என்று கேட்டார்.

 அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "கணவருடைய சகோதரர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்" என்று கூறினார்கள். 

(அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 5232)

மேற்கண்ட ஹதீஸை பாருங்கள் மச்சான் உறவு என்பது ஏனைய ஆண்களோடு பழகுவதை விட மோசமானது அதாவது அவர்கள் மரணத்திற்கே சமமானவர்கள்

ஒரு பெண்ணுக்கு தனது கணவனின் சகோதரன் தனது கணவன் மரணிக்கும் வரை அல்லது தலாக் சொல்லப்படும் வரை அல்லது குலா சொல்லும் வரை திருமணம் முடிக்க முடியாது 

அதே போன்று தான் ஒரு ஆணுக்கும்

 ஒரு ஆணுக்கு தனது மனைவியின் சகோதரி தனது மனைவி மரணிக்கும் வரை அல்லது தலாக் சொல்லப்படும் வரை அல்லது குலா சொல்லும் வரை திருமணம் முடிக்க முடியாது 

இது தான் தற்காலிக மஹ்ரம் என்பதன் விளக்கம் 

மற்றபடி ஒரு அந்நிய ஆணோடு பலகுவதை விடவும் ஒரு அந்நிய பெண்ணோடு பலகுவதை விடவும் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ஒரு உறவே 

மச்சான் மைனி/மதினி உறவு
 
எனவே பெற்றோர்களே!
சகோதரிகளே!
சகோதரர்களே! 

இந்த உறவு விடயத்தில் நாம் இஸ்லாமிய வரம்புகளை மீறாமல் அல்லாஹ்வை பயந்து நடந்து கொள்ள வேண்டும்

தொடரும்......

ஆக்கம் 
ஸாஜித் அஹமட் கியாஸ்தீன்
மஸ்ஸல,பேருவளை
News ,

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.