குறுகிய கால கற்கை நெறிகளை பூர்த்தி செய்துவிட்டு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளைத் தேடிச் செல்லுகின்ற ஒரு நிலைமை அதிகரித்து வருகின்றது பொறியியலாளர் ஷிப்லி பாறுக்

எம்.ரீ. ஹைதர் அலி
தங்களது பிள்ளைகளின் மூலமாகவே பெற்றோர்கள் சமூகத்தில் நிலையான கௌரவத்தினையும் சமூக அங்கீகாரத்தினையும் பெற்றுக்கொள்ள முடியும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் 2016 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து காத்தான்குடி எலைட் (Elite) பாலர் பாடசாலைக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
முறையான கல்வி மற்றும் நல்லொழுக்கத்தின் மூலமாகவே எதிர்காலத்தில் சிறந்த, சமூகத்திற்கு பயனளிக்கக்கூடிய பிள்ளைகளாக எமது பிள்ளைகளை உருவாக்க முடியும்.

அவ்வாறான பிள்ளைகளின் மூலமாகவே சமூகத்தில் எமக்கான நிலையான அங்கீகாரத்தினையும், கௌரவத்தினையும் பெற்றோர்களாகிய நாம் பெற்றுக்கொள்ள முடியும்.

எமது பிள்ளைகளையும் அத்தகைய சிறந்த பிரஜைகளாக உருவாக்குவதற்கு பெற்றோர்களாகிய நாங்கள் சில தியாகங்களையும், அர்ப்பணிப்புகளையும் மேற்கொள்ளவேண்டியுள்ளது.

குடும்ப பொருளாதார நிலை, விரைவாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மற்றும் ஏனைய பல்வேறு காரணங்களினால் எமது சமூகத்திலுள்ள அதிகமான ஆண் பிள்ளைகள் முறையான கல்வியினை பெற்றுக்கொள்ளவதற்கு மாற்றமாக குறுகிய கால கற்கை நெறிகளை பூர்த்தி செய்துவிட்டு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளைத் தேடிச் செல்கின்ற ஒரு நிலைமை அதிகரித்து வருகின்றது.

இவ்வாறு முறையான கல்வியினை தவறவிடுகின்ற மாணவர்கள் எதிர்காலத்தில் இந்த நாட்டில் சிறந்த வேலைவாய்ப்பு அல்லது அரச நியமனம் ஒன்றை பெற்றுக்கொள்ளமுடியாத ஒரு துர்பாக்கிய நிலை ஏற்படுகின்றது.

எனவே நாங்கள் எத்தகைய அர்ப்பணிப்புகளை மேற்கொண்டேனும் எங்களுடைய பிள்ளைகளுக்கு முறையான கல்வியினை பூரணமாக பெற்றுக்கொடுக்க வேண்டும்.

அந்தவகையில் நாங்கள் எமது மாணவர்களுக்கு சிறந்த கல்வியினை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் கிழக்கு மாகாண சபை மூலமாகவும் தனிப்பட்ட முறையிலும் தொடர்ச்சியாக பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளோம் என தனது உரையில் தெரிவித்தார்.News ,

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.