மீராவோடைப் பிராந்திய உலமாக்கள் கௌரவிப்பு விழாவும் மலர்வெளியீடும் இன்று...

மீராவோடைமீரா ஜும்ஆபள்ளிவாயலின் ஏற்பாட்டில்
மீராவோடைப் பிராந்திய உலமாக்கள் கௌரவிப்பு விழாவும் 'கௌரவிக்கப்படும் மீராமண்ணின் உலமாச் செல்வங்கள்" மலர்வெளியீடும்

மட்டக்களப்புமாவட்டத்தின் கோறளைப்பற்றுமேற்குஓட்டமாவடிபிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீராவோடைமீரா ஜும்ஆ பள்ளிவாயலின் பரிபாலன சபையின் ஏற்பாட்டில் நடாத்தப்படும் இவ் விழாவானது 01.07.2017ஆந் திகதி சனிக்கிழமை (இன்று) பி.ப. 04.00 மணியளவில் மீராவோடை மீராஜும் ஆபள்ளிவாயலில் நடைபெறவுள்ளது. 

மீரா ஜும்ஆபள்ளிவாயலின் தலைவர் கே.பி.எஸ். ஹமீட் (கிழக்குமாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளர்) தலைமையில் நடைபெறவுள்ள இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக பானந்துரை தீனிய்யா அரபுக் கல்லூரியின் ஷரீஆ உயர் கல்விக் கற்கையின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க். எம்.என்.எம். அன்பாஸ் (தீனி) அவர்கள் கலந்துகொள்ளவுள்ளார். 

மீராவோடைப் பிராந்தியத்தைச் சேர்ந்த (மீரா ஜும்ஆ பள்ளிவாயல் மஹல்லாவிற்குட்பட்ட) மீராவோடைகிழக்கு,மீராவோடைமேற்கு,செம்மண்ணோடை,மாஞ்சோலை,பதுரியாநகர் ஆகியகிராமங்களைச் சேர்ந்த 219 உலமாக்கள் இந்நிகழ்வில் கண்ணியப்படுத்திகௌரவிக்கப்படவுள்ளனர்.

மீரா ஜும்ஆபள்ளிவாயல் பரிபாலன சபை உறுப்பினர்கள் மற்றும் பலமுக்கியஸ்தர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெறும் இவ்விழாவில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.


விழாஏற்பாட்டுக் குழு
பள்ளிவாயல் பரிபாலன சபை
மீரா ஜும்ஆபள்ளிவாயல்
மீராவோடை.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.