Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

TNTJ தலைவர் அல்தாபி திடீர் ராஜினாமா - அறிவிப்பில் தெளிவின்மையால் தொண்டர்கள் பலத்த சர்ச்சையில்...

Bublished By Online Ceylon on Sunday, July 2, 2017 | 7:52 AM

இந்தியாவின் தெற்கு மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தில் பெயர்போன முஸ்லிம் மக்கள் பேரியக்கமான தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் (TNTJ) தலைவர் ஃபக்கீர் முஹம்மது அல்தாபி தனது தலைவர் பதவியை திடீர் ராஜினாமா செய்துள்ளது அமைப்பின் தொண்டர்கள் மத்தில் பலத்த சர்ச்சையை எழுப்பியுள்ளது.
காரணம் குறிப்பிடப்படாமல் இவ் அறிவிப்பு வெளியிடப் பட்டதால் தொண்டர்கள் மிகுந்த கவளையை தெரிவித்து வருவதையும் ப.மு அல்தாபி அவர்களை நேரடியாக தொடர்புகொண்டு தகவல் பெறும் வழிகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் சந்தேகத்திற்கிடமான கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதையும் அவதானிக்க முடிந்தது. 
எது எப்படியானாலும் சமூகத்திற்காக குறல் எழுப்பும் இது போன்ற தலைவர்கள் தங்கள் பணிகளை தொடர்ந்தும் சமூகத்திற்காக வழங்க வேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பு..

TNTJ யின் உத்தியோகபூர்வ அறிவிப்பு
முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைவராக இருந்த ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் தனது பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
இது குறித்து பரிசீலிக்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உயர்நிலைக் குழு கூட்டம் கடந்த 29.06.2017 வியாழக் கிழமை கூடியது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பங்கேற்றார்கள்.
நடந்த இக்கூட்டத்தில் ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபியின் ராஜினாமாவை ஏற்பது என முடிவு செய்யப்பட்டது.
எனவே அடுத்த பொதுக்குழு கூடும் வரை மாநிலத் துணைத் தலைவராக உள்ள எம்.ஐ. சுலைமான் தலைவர் பொறுப்பை கவனிப்பார் என உயர்நிலைக்குழுவில் முடிவு செய்யப்பட்டது என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு
மாநில நிர்வாகம்
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved