மீராவோடை ஜூம்ஆப் பள்ளிவாயல் ஏற்பாட்டில் உலமாக்கள் கௌரவிப்பும் “உலமாச் செல்வங்கள்” மலர் வெளியீடும்

எம்.ரீ. ஹைதர் அலி
கிழக்கு மாகாணத்தில் முதன் முதலாக ஓட்டமாவடி – மீராவோடை பிராந்தியத்திலுள்ள அனைத்து உலமாக்களையும் கௌரவிக்கும் நிகழ்வும் ”மீரா மண்ணின் உலமாச்செல்வங்கள்” என்ற மலர் வெளியீடும் 2017.07.01ஆந்திகதி -  சனிக்கிழமை மாலை மீரா ஜூம்ஆப் பள்ளிவாயலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வானது மீராவோடை மீரா ஜூம்ஆப் பள்ளிவாயலின் ஏற்பாட்டில் மீராவோடை ஜூம்ஆப் பள்ளிவாயலின்  நிருவாக எல்லைக்குட்பட்ட ஒன்பது பள்ளிவாயல்களிலிருந்தும் மீராவோடை கிழக்கு, மீராவோடை மேற்கு, செம்மண்ணோடை மற்றும் மாஞ்சோலை - பதுரியா நகர் போன்ற நான்கு கிராம சேவையாளர் பிரிவை உள்ளடக்கிய கிராமங்களைச் சேர்ந்த குர்ஆனை மனனம் செய்த சுமார் 75 ஹாபிழ்களும் 180 மௌலவிமார்களும் மீராவோடை மீரா ஜூம்ஆப் பள்ளிவாயலில் கௌரவிக்கப்பட்டனர்.

மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாயலின் பரிபாலன சபையின் ஏற்பாட்டில் அதன் தலைவர் கே.பி.எஸ். ஹமீட் தலைமையில் பள்ளிவாயலில் இடம்பெற்ற நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பாணந்துறை தீனியா அரபுக்கல்லூரியின் விரிவுரையாளர் அஷ்ஷெய்க். அல்முப்தி எம்.என்.எம். அன்பாஸ் கலந்து கொண்டார்.

அத்துடன் மீராவோடை மீரா ஜூம்ஆப் பள்ளிவாயல் பரிபாலன சபைக்கு உலமாக்களால் நினைவுச்சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டதுடன், இதனை இக்கௌரவிப்புக்குழுவின் தலைவர் யூ.எல்.எம். இல்யாஸ் மௌலவி அவர்களிள் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வின் ஏனைய அதிதிகளாக காத்தான்குடி பலாஹ் அரபுக்கல்லூரியின் உப அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எம். அலியார், ஏறாவூர் பாகியாதுல் ஸாலிஹாத் அரபுக்கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க். எம்.எச்.எம். சாதீக், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க். எம்.ரீ.எம். றிஸ்வி, ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு கோட்டக் கல்விப்பணிப்பாளர் எம்.எல்.எம். ஜூனைட், அஷ்ஷெய்க். கவிமணி கலாபூசனம் எம்.எச்.எம். புஹாரி, காத்தான்குடி பலாஹ் அரபுக்கல்லூரியின் சிரேஸ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் ஏ.ஜி.எம். அமீன்,  மீரா ஜூம்ஆப் பள்ளிவாயல் பரிபாலன சபையினர், மௌலவிமார்கள் உட்பட பிரதேச முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.
News ,

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.