அரசாங்க தகவல் திணைக்களத்திலும் அரச நிதி துஷ்பிரயோகம் - ராஜபக்‌ஷவினரின் கைங்கர்யம்

மஹிந்த அரசின் இறுதிக் காலத்தில் அரசாங்க தகவல் திணைக்களம் ஊடாகவும் மூன்று மில்லியன் ரூபாவுக்கு அதிகமான நிதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் மஹிந்த அரசின் எட்டு வருட சாதனைகளை விளக்கும் வகையில் சிறுகுறிப்புகள் கொண்ட கையேடு ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களம் மூலமாக வௌியிடப்பட்ட குறித்த கையேட்டின் நிர்மாணம் மற்றும் வரைகலை செயற்பாடுகளுக்காக முப்பது இலட்சத்து 57 ஆயிரத்து 600 ரூபா செலவிடப்பட்டுள்ளது.
அதற்கான நிதியை பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஊடாக தருவதாக வாக்களித்தே குறித்த கையேடு வௌியிடப்பட்ட போதிலும் பின்னர் அதற்கான நிதி அரசாங்க தகவல் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.
பொலிஸ் நிதி மோசடிப்பிரிவினர் இது தொடர்பான அறிக்கையொன்றை நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்துள்ளதுடன், மிக விரைவில் அது தொடர்பாகவும் வழக்குத் தாக்கல் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.