முச்சக்கர வண்டிக்கு புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்த கால அவகாசம் நீடிப்பு

நாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய போக்குவரத்து முறைச் சட்டங்களில் முச்சக்கர வண்டிகளில் மீற்றர் பொறுத்த வழங்கப்பட்ட கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை குறிப்பிட்டுள்ளது.
இதன்அடிப்படையில், டிசம்பர் 31 ஆம் திகதி இறுதி கால எல்லையாக வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பயணிகள் மற்றும் பொருட்களை ஏற்றிச் செல்லும் முச்சக்கர வண்டிகளுக்கு “டெக்ஸி மீட்டர்” பொருத்தப்படுவதை கட்டாயமாக்கி  அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் கடந்த 8 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
இந்த வர்த்தமானி அறிவித்தலின் படி, முச்சக்கர வண்டியில் பயணம் செய்பவர்களுக்கு பயண முடிவின் போது பற்றுச் சீட்டு வழங்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பயணம் செய்த தூரம், வாகனத்தின் இலக்கம், கட்டணம், பெற்றுக் கொண்ட திகதி என்பன அப்பற்றுச் சீட்டில் அமையப் பெறல் வேண்டும்.
அத்துடன், முச்சக்கரவண்டியில் பயணிகள் இருக்கையுள்ள இடத்தில் வலது பக்கம் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ மறைத்திருத்தல் வேண்டும் என்ற அறிவிப்பும் குறித்த வர்த்தமானியில் வெளியாகியுள்ளது. இச்சட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி அமுலுக்கு வருவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.