முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க அதிரடியாக கைது

வித்தியா படுகொலையுடன் தொடர்புடைய முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2015 ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின்போது, கஹாவத்தை பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவமொன்று தொடர்பாக பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினால் இவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வித்தியா படுகொலை தொடர்பில் பிரதான சந்தேக நபருக்கு பாதுகாப்பு வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இவர், கடும் நிபந்தனைகளுடன் கடந்த 13 ஆம் திகதி விடுவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.