Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

விபச்சார விடுதி சுற்றிவழைப்பு - தாயும், மகனும் கைது

Published on Thursday, September 21, 2017 | 8:14 AM

கேகாலை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் விபசார விடுதியில் இருந்த தாயும், மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சோதனை பிடியாணையை பெற்ற பின்னர் உளவாளி ஒருவரை பயன்படுத்தி காவல்துறை இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளது.
உளவாளி விபசார விடுதியில் நுழைந்த பின் கொடுத்த தகவலுக்கு அமைய காவற்துறையினர் அதிரடியாக உள்நுழைந்து அங்கிருந்த ஆண்கள் மற்றும் பெண்களையும் கைது செய்துள்ளனர்.
நேற்று காலை இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது. கொழும்பு – கண்டி பிரதான வீதியில் மீபிட்டிய பகுதியில் இந்த விபசார விடுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ள நிலையில், இதனை நடத்திச் சென்ற பெண்ணொருவர், விபசாரத்தில் ஈடுபட்ட இரு பெண்கள் மற்றும் 4 ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விபசார விடுதியை நடத்திச் சென்ற பெண், 54 வயதானவர் என்பதுடன், ஏனைய இரு பெண்களும் 50 மற்றும் 43 வயதானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் கம்பளை, மீபிட்டிய ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆகும்.
கைது செய்யப்பட்டுள்ள ஆண்கள் 18, 23, 28 வயதானவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த நபர்களில் 23 வயதான இளைஞரின் தாயே, விபசார விடுதியை நடத்திச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் இன்று கேகாலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved