நீதி மன்ற தடை உத்தரவின் காரணமாக மியன்மார் அரசு ஆதரவு ஆர்ப்பாட்டம் ரத்தானது

சிங்கள பௌத்த அமைப்புக்கள் 17 ஒன்றிணைந்து மியன்மார் அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்து நேற்று (19) கொழும்பு விகாரமகா தேவி பூங்காவுக்கு அருகில் நடாத்தவிருந்த ஆர்ப்பாட்டத்துக்கு  கொழும்பு மேலதிக மஜிஸ்ட்ரேட் ரங்க திஸாநாயக்க இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பொதுபல சேனா, சிங்கள ராவய, ராவணாபலய, ஜாதிக பெரமுன, ஜாதிக பிக்கு பெரமுன உட்பட 17 அமைப்புக்களுக்கே இந்த தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கொழும்பு பித்தளை சந்தி, தெவட்டகல பள்ளிவாயலுக்கு அருகிலுள்ள பகுதி, ரொஸ்மிட் பெதஸ, லிப்டன் சுற்றுவட்டம், தர்மபால மாவத்தை, ஹோர்ட்டன் பெதஸ, எப்.ஆர். சேனாநாயக்க மாவத்தை மற்றும் கன்னங்கர மாவத்தை ஆகிய பிரதேசங்களில் இந்த ஆர்ப்பாட்டத்தை நடாத்த தடை செய்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.