அரச அலுவலக நேரங்களில் விசேட சலுகைகள் - இன்று முதல் அமுல்

பத்­த­ர­முல்லைப் பிர­தேச அரச அலுவலர்­களின் அலு­வ­லக நேரங்­களில் நெகிழ்ச்­சி­யினைச் செயற்­ப­டுத்தும் முன்­னோ­டித்­திட்டம் இன்று திங்கட்கிழமை முதல் எதிர்­வரும் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி வரை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­மென அரச நிர்­வாக மற்றும் முகா­மைத்­துவ அமைச்சு அறி­வித்­துள்­ளது.
இது­தொ­டர்பில் அமைச்சு வெளியி­ட்­டுள்ள சுற்று நிரு­பத்தில்  குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது, 
அமைச்­ச­ரவைத் தீர்­மா­னத்தின் பிர­காரம், கொழும்பு நக­ரத்தில் நிலவும் போக்­கு­வ­ரத்து நெரி­ச­லுக்குத் தீர்­வாக முற்­செ­யற்­பாட்டுத் திட்­ட­மி­டலின் ஆரம்பகட்­ட­மாக பத்­த­ர­முல்லைப் பிர­தே­சத்தில் அமைந்­துள்ள அர­சாங்க அலு­வ­ல­கங்­களில் கட­மை­யாற்றும் அலு­வ­லர்கள் இன்று திங்கட்கிழமை முதல் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி வரை­யான மூன்று மாத காலத்­திற்கு இந்த நெகிழ்­வான நேரத்தை திணைக்­களத் தலை­வரின் அனு­ம­தி­யுடன் பெற்­றுக்­கொள்ள முடியும்.
இதன் பிர­காரம், காலை 7.30 மணிக்கும்  மாலை 5.00 மணிக்­கு­மி­டை­யி­லான காலத்­தினுள் மோட்டார் வாகன சார­திகள் 9 மணித்­தி­யால சேவைக் காலத்­தி­னையும், கனிஷ்ட அலு­வ­லர்கள் 8 மணி 45 நிமிட சேவைக் காலத்­தி­னையும், ஏனைய அலு­வ­லர்கள் 7 மணி 45 நிமிட சேவைக்­கா­லத்­தி­னையும் கொண்­ட­தாக நாளொன்­றுக்­கான வேலை  நேரம் இருக்க வேண்டும் எனச் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.
இச்­சேவை நேரத்தில் அலு­வ­ல­கத்­திற்கு வரும் நேர­மா­னது காலை 7.30 மணிக்கும் 9.15 மணிக்­கு­மி­டைப்­பட்­ட­தா­கவும், அலு­வ­ல­கத்தை விட்டு வெளியேறும் நேர­மா­னது பிற்­பகல் 3.15 மணிக்கும் மாலை 5 மணிக்­கு­மி­டைப்­பட்­ட­தா­கவும் இருத்தல் வேண்­டு­மென சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ள­தோடு, பொது­மக்­க­ளுக்கு சேவை வழங்­கு­வ­தற்­காக சகல அரச அலு­வ­லர்­களும் குறிக்­கப்­பட்ட அலு­வ­லக நேரங்­க­ளுக்கு ஏற்ப காலை 9.15 மணி தொடக்கம் பிற்­பகல் 3.15 மணிக்­கி­டை­யி­லான காலத்­தினுள் கட்­டா­ய­மாக கட­மையில் ஈடு­பட வேண்­டு­மெ­னவும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.
இது­த­விர, நிறு­வ­னத்தின் நட­வ­டிக்­கை­களை தடை­யின்றி முறை­யாக நடத்திச் செல்­வ­தற்கு முடி­யு­மான வகையில் ஏற்­பா­டுகள் மேற்­கொள்­வதன் கீழ் அலு­வ­லர்கள் மற்றும் நிறு­வனத் தலை­வர்கள் என்ற இரு தரப்­புக்­க­ளி­னதும் முன் அனு­ம­தி­யுடன் நெகிழ்ச்­சி­யான அலு­வ­லக நேரத்தில் தனது நிறு­வ­னத்­தினுள் செயற்­ப­டுத்த நிறு­வனத் தலை­வர்கள் பொறுப்­புடன் இருத்தல் வேண்­டு­மெ­னவும் அமைச்சு வெளியிட்­டுள்ள சுற்று நிரு­பத்தில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.
மேலும், நெகிழ்ச்­சி­யான அலு­வ­லக நேரத்­தினை செயற்­ப­டுத்தும் காலப் பகு­தி­யினுள் தற்­போது நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் தமக்கு உரிய பொது­வான அலு­வ­லக நேரம் தவிர்ந்த நேர­மொன்­றினை தமது அலு­வ­லக நேர­மாகக் கரு­து­வ­தற்கு உடன்­பட்ட எந்­த­வொரு அலு­வ­ல­ருக்கும் அர­சாங்க நிர்­வாக சுற்­று­நி­ரு­பத்தின் மூலம்
ஏற்­பா­டுகள் தயா­ரிக்­கப்­பட்­டுள்ளன. கடமைக்கு சமுகமளிக் கும் போதும்,  கடமை முடிந்து வெளியேறும் போதும் ஏற்ப
டும் தாமதங்கள் மற்றும் அத்தாமதங்களை ஈடுசெய்வதற்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் எதுவும் பெற்றுக் கொடுத் தல் கூடாதென அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் சுற்று நிருபத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.