பாகிஸ்தான் தேர்தலில் நவாஸ் செரீப்பின் பாரியார் வெற்றி

லாகூர் தொகுதியில் நடத்தப்பட்ட இடைத் தேர்தலில், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்பின் பாரியார் குல்சூம் நவாஸ் வெற்றி வெற்றுள்ளார்.
‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் பதவி நீக்கம் செய்யப்பட்டதுடன், அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்டது.
இந்நிலையில், நவாஸ் செரீப்பின் லாகூர் தொகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடைத் தேர்தல் நடத்தப்பட்டது.
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட இவர், 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர் 59 ஆயிரத்து 413 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இதேவேளை, இவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த யாஸ்மின் ரசீத் 46 ஆயிரத்து 145 வாக்குகளையும் மும்பை தாக்குதல் பயங்கரவாதியும் ஜமாத் – உத் -தவா அமைப்பின் தலைவருமான ஹபீஸ் சயீத்தின் ஆதரவாளர் யாகூப் ஷேக் 4 ஆயிரம் வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
மேலும், இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்காக 3 இலட்சத்து 24 ஆயிரத்து 786 பேர் தகுதி பெற்றிருந்தனர் என்பதுடன், 220 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
News ,

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.