மெக்சிகோவில் பாரிய நிலநடுக்கம் - 100 இற்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பு

மெக்சிகோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 130 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மெக்சிகோவில் நேற்று (19) இரவு 7.1 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
மெக்சிகோ நகரில் சுமார் 27 கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. அத்துடன் 100 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மொர்லோஸ் மாநிலத்தில் மட்டும் 54 பேர் பலியாகியுள்ளதாக வௌிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இடிபாடுகளுக்கிடையே பலர் சிக்கியுள்ளதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன, மின்சாரம், தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டதால் 30 இலட்சம் பேர் அவதிப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த நாட்டில் கடந்த 1985 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது பலியான 10,000 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியின் போது நிலநடுக்க பாதுகாப்பு ஒத்திகைகளும் நடத்தப்பட்டுள்ளன, நிகழ்ச்சி முடிந்த சில மணிநேரங்களிலேயே இந்த பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இம்மாத தொடக்கத்தில் 8.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 90 பேர் பலியாகினர் என்பது நினைவு கூறத்தக்கது.
News ,

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.