சரத் பொன்சேகாவுக்கு வீசா நிராகரிப்பு - போர்க்குற்றச்சாட்டுகள் காரணமாம்

இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுகள் காரணமாக, ஜனாதிபதியுடன் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவதற்காக தமக்கு இருந்த வாய்ப்பு இல்லாது போயுள்ளதாக அமைச்சரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
களனியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிலருக்காக முன்வைக்கப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுகள் காரணமாக, தமக்கு வீசா இரத்துச் செய்யப்பட்டுள்தாகவும் அவர் கூறியுள்ளார்.
ஏனையவர்களுக்கு வீசா வழங்கப்பட்டதாகவும், தமக்கு வீசா வழங்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று (நேற்று 18) வீசா வழங்கப்பட்டால், இரவே நியூயோர்க் செல்ல தாம் தயார் என்றும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.