காணாமல் போன சிறுவன் woshing mashin உள்ளிருந்து கண்டுபிடிப்பு

மாதம்பே-புளியன்கடவர வெல்பொதுவே பிரதேசத்தில் கடத்தி செல்லப்பட்டதாக பொலிஸாரால் தேடப்பட்ட சிறுவன் தனது சொந்த வீட்டிலேயே சலவை இயந்திரத்தினுள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பிர­தே­சத்தை சேர்ந்த ஐந்து வய­தான ­சி­று­வனை முன்­பள்­ளிக்கு அழைத்து செல்­வ­தற்­காக அவ­ரது பெற்றோர் தயார்­ப­டுத்தி வைத்­துள்­ளனர்.
சிறிது நேரத்தின் பின்னர் முன்­பள்­ளிக்கு அழைத்துச் செல்ல தயா­ரான போது பிள்ளை காணாமல் போயி­ருந்­த­மையால் அவ­ரது பெற்றோர் வீடு முழு­வதும் தேடிப்­பார்த்­துள்­ளனர்.
அதன்­போது, வீட்­டுக்கு அரு­கி­ல் வீதியில் நிறுத்­தப்­பட்­டி­ருந்த லொறி­ ஒன்று அந்த வ­ழி­யாக வேக­மாக பய­ணித்­தி­ருந்­த­மையால் அந்த லொறியில் சிறுவன் கடத்­தப்­பட்­டுள்­ள­தாக பெற்றோர் எண்ணியுள்ளனர்.
அதன் பின்பு பெற்றோர் 119 அவ­சர பொலிஸ் பிரி­வுக்கு அழைப்பு விடுத்து தமது பிள்ளை கடத்­தப்­பட்­டுள்­ள­தாக அறி­வித்­துள்­ளனர்.
இத­னை­ய­டுத்து, பிள்ளை கடத்திச் செல்­லப்­பட்­ட­தாக கூறப்­படும் லொறியை பின்­தொ­டர்­ந்து  இரு மோட்டார் சைக்­கிளில் பொலிஸார் புறப்­பட்டு சென்றுள்ளனர்.
மேலும் சில பொலிஸார் பிள்­ளையின் வீட்­டுக்கு சென்று விசா­ர­ணை­களை மேற்­கொண்­டதோடு வீட்டிலும் வீட்டை சுற்றியும் தேடுதலை மேற்கொண்டுள்ளனர்.
அதன்­போது, காணாமல் போன­தாக கூறப்­பட்ட பிள்ளை வீட்­டி­லி­ருந்த சலவை இயந்­தி­ரத்­தினுள் மிகவும் சிரமத்துடன் அமர்ந்திருந்த  நிலையில்       மீட்டுள்ளனர்.
குறித்த சிறுவனிடம் பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­ட­போது, தனக்கு முன்­பள்­ளிக்கு செல்­வ­தற்கு விருப்பம் இல்­லை­யெ­னவும், அதற்­கா­கவே தான் சலவை இயந்­தி­ரத்­தினுள் ஒளிந்­து­கொண்­ட­தா­கவும் தெரி­வித்­துள்­ளது.
குறித்த சிறுவன் சுமார் 1 மணித்தியாலங்கள் சலவை இயந்திரத்தினுள் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.