⁠⁠⁠⁠⁠சொல்வதைத்தவிர வேறு வழியில்லை : அடிமைச் சாசனத்தைப் போல ஒரு யாப்பு.......


சொல்வதைத்தவிர வேறு வழியில்லை
_____________

உத்தேச புதிய அரசியல் யாப்பு நகல் முன்மொழிவுகள் மூன்று மொழிகளிலும் வெளியாகியுள்ளன.

அதில் உள்ள தந்திரம் என்னவென்றால் சிங்களத்தை திருப்திப்படுத்த சிங்கள மொழியில் ஒருவிதமாகவும், தமிழ் தரப்பை திருப்திப்படுத்த தமிழில் ஒரு விதமாகவும் அதன் விதந்துரைகள் காணப்படுவதேயாகும்!

முஸ்லிம் தரப்பிற்கென்று திருப்திப்படுத்த அங்கே ஒன்றுமில்லை. 

( அமைச்சுப்பதவிகள், பண மூட்டைகள் எல்லாம் ஏலவே வீசிய பிறகு உங்களுக்கென்னடா உரிமையும் மண்ணாங்கட்டியும் என்ற அரசின் மைண்ட் வாய்ஸை இந்த இடத்தில் புரிந்து கொள்ளவும்)

அது போக இவர்களைப்பற்றிய “பைல்கள்” ( allegation bundles/ files) என்று சொல்லப்படும் ஊழல் மோசடி வரலாறுகள் இரு பெருங்கட்சிகளின் அலுமாரிகளிலும் பத்திரமாக இருக்கின்றன.

அதனால்தானே பாராளுமன்ற கொரிடோரில் வைத்து ராஜிதவும், துமிந்தையும் நாக்கைப்பிடுங்குவது போல நாலு வார்த்தை கேட்டதுமே காற்சட்டைக்குள் சிறு நீர் ஒழுக ஓடிப்போய் அரசுக்கு ஆதரவாய் கை உசத்திய அழகை பார்த்து ரசித்தோமே!

இப்போதுள்ள பிரச்சினை என்னவென்றால் இந்த 21 சொங்கிகளுள் மூன்று மொழிகளும் எழுத வாசிக்க புரிந்து கொள்ள இயலுமானவர்கள் வெகு சிலரே.

அதிலும் விசேஷம் தமிழைக்கூட சரியாக வாசித்து புரிய முடியாத பிரதிநிதிகளும் உளர்.

இந்த லட்சணத்தில் இவர்களெல்லோரும் இணைந்து புதிய யாப்பு முஸ்லிம் சமூகத்திற்கு இறக்கவிருக்கிர ஆப்புகளை எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறார்கள் என்ற அச்சமே மேலோங்கியிருக்கிறது!

அதுவும் நாளை காலை புதிய யாப்பிற்கான அங்கீகார வாக்கெடுப்பு நடைபெறுமென்றால் இன்று இரவு ஜம்இய்யதுல் உலமாவில் கூடி சாட்டுக்கழித்து விட்டு அரசின் எண்ணப்பாடுகளுக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டை தவிர வேறெதனை இவர்களால் செய்துவிட இயலும்?

அதில் இணைந்த வடகிழக்கென்ற அதிகார மையம் நிறுவப்பட்டாலென்ன....

பெளத்த மதமே முதன்மை மதமாக அங்கீகரிக்கப்பட்டாலென்ன....

சிறுபான்மைக்கு ஓரளவு ஆறுதல் தரும் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை முற்றாக நீக்கப்பட்டாலென்ன...

புதிய தேர்தல் முறைகளால் சமூகத்தின் பிரதிநிதித்துவமும், அரசியல் அடையாளமும் அழிந்து போனாலென்ன...

மூன்றாந்தர பிரஜைகளாக சொந்த நாட்டில் முஸ்லிம் சமூகம் மாற்றப்பட்டாலென்ன....

இறுதியில் அவரும் உயர்த்தினார் நானும் உயர்த்தினேன் என்று வந்து சொல்வார்கள்!

அதிலும் துயரம்; அவர்களையும் குளிப்பாட்டி சுத்தப்படுத்த ஆயத்தமாக இருக்கும் சுரணையற்ற அள்ளக்கைகள் வாழும் சமூகமொன்றில்தான் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நாம் எல்லோரும் பெரும் ஆபத்தொன்றை எதிர் நோக்குகிறோம்.

சமூகப்பிரக்ஞையுள்ள சகோதர சகோதரிகள் இந்த இடத்திலாவது கொஞ்சம் விழித்துக்கொள்ளுங்கள்.

பேச வேண்டிய இடங்களில் பேசுங்கள்
எழுத வேண்டிய இடங்களில் எழுதுங்கள்.

அடிமைச்சாசனத்தைப்போல ஒரு யாப்பு சட்டமாக்கப்பட்டு விட்டால் நமது சந்ததிகள் அழுந்தும்!

அதனைப்பற்றி பேசவும் போராடவும் நமக்கு இடமேயில்லாமல் போகும்!

நன்றி - Mujeeb Ibrahim

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.