SLTJ அப்துர் ராஸிக்கை சுட்டுக் கொல்லுங்கள் - டான் பிரிஸாதிடம் கூறிய மௌலவி வாபஸ் பெற்றார் VIDEO

அப்துர் ராசிக்கை சுட்டுக் கொல்லுங்கள் – டான் பிரியசாதிடம் கோரிக்கை வைத்த மௌலவி

மௌலவி நூருல் ஹக் இம்தாதி
நுகேகோட
இலங்கை தீவில் முஸ்லிம்களுக்கு எதிராக எத்தனையோ அநியாயங்கள் நடைபெறுகின்றன. பள்ளிகள் தாக்கப்படுவது, கடைகள் தீ வைத்து எறிக்கப்படுவது, பெண்களுக்க எதிரான எதிர்ப் பிரச்சாரங்கள், கொலை, கொள்ளை என எண்ணிலடங்காத அநியாயங்கள் நிகழ்த்தப்படுகின்றன. இதை விடவும் மிகப் பெரும் அவலங்கள் வெளிநாடுகளில் வாழும் முஸ்லிம்களுக்கும் நிகழ்கின்றன. அதற்கு ஓர் அண்மைய உதாரணம் தான் மியன்மார் தாக்குதல்கள்.
இது போன்ற முஸ்லிம்களுக்கு எதிரான அநியாயங்கள் நடைபெறுகிற நேரங்களில் எல்லாம் முஸ்லிம்களுக்காக வீதியில் இறங்கி போராடும் ஓர் அமைப்பாக ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் அமைப்பு காணப்படுகிறது.
அமைப்பு ரீதியாக இவர்களின் விடயங்களில் எனக்கும் மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும், முஸ்லிம்களுக்கான சமுதாய செயல்பாடுகளில் தன்னலமற்ற ஓர் அமைப்பாக இவர்கள் செயல்படுவதை அவதானிக்க முடிகிறது.
அரசியல் சாயம் இல்லாத ஓர் அமைப்பாக இருக்கும் அதே நேரம், தேர்தல் அரசியல் வேண்டாம் என்ற தெளிவான கொள்கையில் இவ்வமைப்பு செயல்படுகிறது. இந்தக் கொள்கையில் இருக்கும் நிலையில் இவர்கள் வீதிக்கு இறங்கிப் போராடுவதினால் தன்னளவில் இவர்களுக்கு உலகில் எந்த இலாபம் கிடைக்கப் போவதில்லை. பொதுவாக இது போன்ற போராட்டங்களை நடத்தி முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கும் பலர் தேர்தல் அரசியலை நம்பித் தான் இவற்றை செய்கிறார்கள்.
இவற்றையெல்லாம் செய்தால் அடுத்த தேர்தலில் நான் பாராளுமன்றம் சென்று விடலாம் என்ற ஒரே குறிக்கோள் தான் இவர்களுக்கு இருக்கும். ஆனால் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத்தினரோ தேர்தல் அரசியலே எங்கள் அமைப்பின் கொள்கையில் இல்லை என்பதை தெளிவாக அறிவித்து விட்டுத் தான் களத்தில் இறங்கியுள்ளார்கள். இவர்களின் இந்த தன்னலமன்ற சமூக அக்கரைதான் மக்கள் மத்தியல் இவர்களை ஹீரோக்களாக சித்தரிக்கிறது.
வெள்ளம்பிடிய பகுதியில் ஏற்பட்ட பாரிய வெள்ள அணர்தத்தின் போது இராணுவ கட்டமைப்பைப் போல் இவர்கள் செயல்பட்ட விதம் என்னைப் போன்றவர்களை வெகுவாக ஈர்த்து விட்டது எனலாம். அதே போல் நாடலாவிய ரீதியல் இரத்ததானத்தில் முதலிடத்தில் இருப்பதும் இவர்களின் சமுதாய சேவைக்கு சிறந்த எடுத்துக் காட்டாகும்.
அந்த வகையில் முஸ்லிம்களின் உரிமைப் பிரச்சினைகளின் போது தைரியமாக களமிறங்கி போராடுவதும் இவர்களின் சிறந்த செயல்பாட்டுக்கு முன்னுதாரணமாகும்.
கடந்த 14.09.2017 மியன்மார் முஸ்லிம்களை பாதுகாக்கக் கோரி இவர்கள் கொழும்பில் நடத்திய பாரிய ஆர்பாட்டம் மீண்டும் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் பக்கம் மக்களை விழி உயர்த்திப் பார்க்க வைத்தது.
மியன்மார் முஸ்லிம்களுக்கு ஆதரவாக ஆர்பாட்டம் நடத்துவதற்கு எதிராக பொலிசார் நீதி மன்ற தடையுத்தரவை பெற்றும் மாற்று ஏற்பாட்டை உடனடியாக செய்து தாம் அறிவித்ததை விட சிறப்பாகவே ஆர்பாட்டத்தை செய்து முடித்தார்கள்.
ஆனால் இங்கிருக்கிற பலருக்கு உள்ள ஒரு முக்கிய பிரச்சினையே என்னவென்றால்; SLTJ யினருக்கு உதவ வேண்டும் என்பதை விட SLTJ யினர் என்ன செய்தாலும் அதற்கு எதிராக எதையாவது சொல்ல வேண்டுமென்ற குரோதம் ஆழமாக ஊடுருவியிருக்கிறது.
SLTJ சார்பில் மியன்மார் முஸ்லிம்களுக்கு ஆதரவாக ஆர்பாட்டம் நடத்துவதற்கு முன்பதாக முஜிபுர் ரஹ்மான், மரிக்கார் போன்ற அரசியல்வாதிகள் இணைந்து ஓர் ஆர்பாட்டத்தினை நடத்தியிருந்தார்கள். இதே நேரம் தௌஹீத் ஜமாஅத்தும் தனது ஆர்பாட்டத்தை அறிவித்தது. ஆனால் அரசியல் வாதிகளின் ஆர்பாட்டம் பற்றி பேசாத 23 முஸ்லிம் அமைப்புகள் SLTJயின் ஆர்பாட்டத்தை நிறுத்துமாறு கோரி SLTJக்கு கடிதம் அனுப்பியதாக ஆர்பாட்ட உரையின் போது ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத்தின் தலைவர் ரஸ்மின் மௌலவி அவர்கள் கண்டனம் வெளியிட்டார்.
அதே போல் முஸ்லிம்களை கொலை செய்ய வேண்டும் என்று பகிரங்கமாக பேசிவரும் டான் பிரியசாத் என்பவனை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசும் ஒரு மௌலவி SLTJ அப்துர் ராசிக்கை சுட்டுக் கொள்ளுங்கள் எங்களுக்கும் அவர்களினால் பெரும் பிரச்சினைதான் என்று பேசிய ஓடியோ இன்று சமூக தளங்களில் பரவி வருகிறது.
ஏன் இவர்கள் மீது இவ்வளவு குரோதத்தை இந்த சமுதாயம் வெளிப்படுத்த வேண்டும்?
SLTJயினர் செய்த பிழை என்ன?
சமுதாயத்திற்காக அவர்கள் குரல் கொடுப்பது தவறா?
பள்ளிகள் தாக்கப்பட்ட நேரத்தில் பாதையில் இறங்கி போராடுவது தவறா?
கொழும்பு, கிரான்பாஸ் தப்லீக் ஜமாஅத் பள்ளி தாக்கப்பட்ட நேரத்தில் இரவு 03 மணி வரை இனவாதிகளுக்கு எதிராக நெஞ்சை நிமிர்த்தி போராடியது தவறா?
இரத்ததானம் செய்து இலங்கை முஸ்லிம்கள் மனிதநேய விரும்பிகள் என்று பெரும்பான்மை மக்கள் மனங்களை வெற்றிகொள்வது தவறா?
வெள்ளம் போன்ற அணர்த்தங்களின் போது தன்னலம் பாராது பாடுபட்டு மக்களை காப்பாற்றியது தவறா?
இஸ்லாத்தை இலங்கை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முயற்சிப்பது தவறா?
வெளிநாட்டில் ஒரு முஸ்லிம் பாதிக்கப்பட்டால் கூட அவர்களுக்காகவும் களமிங்கி வீதி வீதியாக பதாதை தூக்கி போராடுவது தவறா?
இவர்கள் செய்யும் தவறுதான் என்ன?
23 இஸ்லாமிய அமைப்புகளும் சேர்ந்து செய்ய முடியாத பல காரியங்களை தைரியமாக தனித்து நின்று SLTJயினர் செய்து முடிக்கிறார்கள் இந்த ஒன்றுக்காகவாவது அவர்களை ஆதரிக்க வேண்டாம், எதிர்க்காமல் வாய் மூடி இருக்கலாமே? நம்மால் செய்ய முடியவில்லை. இவர்களாவது செய்கிறார்களே என்று பொருத்துப் போகலாமே? அதை விட்டு விட்டு SLTJயினர் நல்லது செய்தால் கூட அவற்றை எதிர்ப்போம். என்று சொல்வதில் என்ன நியாயம்?
மியன்மார் முஸ்லிம்களுக்காக பேசினார் என்பதற்காக அப்துர் ராசிக்கை கொலை செய்யுங்கள் நாங்களும் அதற்கு ஆதரவளிக்கிறோம் என்று இனவாதி டான் பிரியசாதுக்கே போன் பண்ணி சொல்லும் அளவுக்கு குரோதம் முற்றிப் போனது ஏன்?
சிங்கள மொழியல் நம்மால் செய்ய முடியாத பிரச்சாரத்தை மிக அழகாக அவர் செய்யும் போது அதனை ஏன் தடுக்க வேண்டும். 10 வருட கடும் பிரயத்தனத்தின் பின் அழகிய சிங்கள நடையில் அல்குர்ஆனை அவர் மொழிபெயர்த்தது எத்தனை பேருக்கு தெரியும்?
இஸ்லாத்தை பற்றிய மாற்று மத நண்பர்களின் கேள்விகளுக்கு மிக அழகிய தொனியில் அறிவுப்பூர்வமான அப்துர் ராசிக் பதிலளித்து வருவது உங்களில் எத்தனை பேர் அறிந்து வைத்திருக்கிறீர்கள்?
இப்படிப்பட்ட ஒருவரை கொல்ல வேண்டும் என்று காட்டிக் கொடுத்து, போட்டுக்கொடுக்கும் அளவுக்கு ஏன் செல்ல வேண்டும்?
மரணத்தை நினைத்துப் பாருங்கள். கொள்கை வெறிகளை தூர வையுங்கள். அவரவர் கொள்கைகளை அவரவர் நியாயப்படுத்துங்கள். அதற்காக தனியாக சண்டையிடுங்கள். ஆனால் சமுதாயப் பிரச்சினைகளின் போது உங்களால் அதற்காக குரல் எழுப்ப முடியாவிட்டால் அமைதியாகுங்கள். SLTJ போன்ற இளைஞர்களை கொண்ட ஓர் இயக்கம் இயங்குகிறது என்றால் அவர்களை தட்டிக் கொடுங்கள்.
அவர்கள் பாராளுமன்றம் செல்ல எத்தனிக்க வில்லை. அந்தக் கொள்கையை அவர்கள் பிரஸ்தாபிக்கவும் இல்லை. பேரம் பேசும் அரசியலைக் கூட விட்டு விலகி நின்கிறார்கள். அப்படியிருக்கையில் இது போன்ற போராட்டங்களினால் சமுதாய நலன் மாத்திரமே அவர்களின் முன்னனி நோக்கமாக இருக்கிறது.
சமுதாயத்திற்காக குரல் கொடுக்கும் இவர்களின் சேவை நமக்கு என்றும் தேவைப்படுகிறது. ஆகவே சமுதாய தலைவர்களும் உலமாக்களும் இவர்கள் விடயத்தில் அமைதிகாருங்கள். உங்களாலும், என்னாலும் செய்ய முடியாத ஒன்றை இவர்கள் செய்கிறார்கள். அவர்களை தட்டிக் கழிக்காமல் தட்டிக் கொடுத்து சமுதாயத்திற்கு பயன் பெருவோம்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.