Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

ஏழு முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 12 வயது சிறுமி - நீதிமன்றத்தை நாடிய பெற்றோர்

Bublished By Online Ceylon on Wednesday, November 1, 2017 | 6:38 AM

பிரித்தானியாவில் பேஸ்புக் மூலம் அறிமுகமான 12 வயது சிறுமியை 7 முறை பாலியல் பலாத்காரம் செய்த 18 வயது இளைஞனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் சிறுமியின் பெற்றோர் நீதிமன்றத்தை நாடியுள்ளதை அடுத்து குறித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது
ஸ்காட்லாந்தின் வட அயர்ஷயர் பகுதியில் குடியிருந்து வரும் Gary Dryden(18) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பேஸ்புக் வழியாக குறித்த சிறுமியை தொடர்பு கொண்டுள்ளார்.
சில மாதங்கள் நேரிடையாக சந்திக்காமல் சேட் மூலம் நட்பை வளர்த்துக் கொண்ட இருவரும் ஒருகட்டத்தில் நேரில் சந்திக்க ஒப்புக் கொண்டுள்ளனர்.
இருவருக்கும் பல முறை சந்திப்பு நிகழ்ந்த பின்னர் ஒருநாள், Kilwinning பகுதியில் அமைந்துள்ள விளையாட்டு மையத்தின் அருகே உள்ள மறைவிடத்தில் தனியாக சந்திக்க Dryden பரிந்துரைத்துள்ளார்.
இந்த நிலையில் பாலியல் உறவு வைத்துக் கொள்ள விரும்புவதாக சிறுமியிடம் தெரிவித்த அந்த இளைஞன், பின்னர் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளான்.
ஆனால் குறித்த சம்பவத்தை சிறுமி எவரிடம் வெளியிடவில்லை. இதன் பின்னர் சில நாட்கள் கடந்த நிலையில் மீண்டும் சந்திக்க வேண்டும் எனக் கேட்டு சிறுமியிடன் டிரைடன் கெஞ்சியுள்ளான்.
தொடர்ந்து இதேபோன்று சந்திப்பு நடந்த நிலையில் பல்வேறு சந்தர்ப்பங்களிலாக இருவரும் 7 முறை பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே சிறுமி தாம் கர்ப்பமாக இருப்பதை தெரிந்து கொண்டதும் அச்சத்தில் உறைந்த அவர், நடந்த சம்பவத்தை தமது தோழியிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் சிறுமியின் பெற்றோருக்கும் தெரிய வரவே சம்பவம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இதனிடையே நீதிமன்றத்தின் அனுமதியுடன் கருக்கலைப்புக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மருத்துவ சோதனையில் சிறுமி 12 வார கர்ப்பத்துடன் இருப்பதும், அதன் தந்தை சிறுமியின் பேஸ்புக் நண்பர் டிரைடன் எனவும் தெரிய வந்தது.
இந்த நிலையில் குறித்த வழக்கில் டிரைடன் குற்றவாளி என நிரூபணமானால் சிறை தண்டனை உறுதி என கிளாஸ்கோ உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது

நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved