Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

காலி கிங்தோட்டையில் இன முறுகல் : சில காயம் & சேதம் - நிலமை கட்டுப்பாட்டில்

Bublished By Online Ceylon on Friday, November 17, 2017 | 6:38 AM

காலி, கிந்தோட்டை, விதானகொட பகுதியில் இரு சமூகங்களுக்கு இடையே கடந்த 4 நாட்களுக்கு முன் ஏற்பட்ட சிறிய சலசலப்பு நேற்று (16) மீண்டும் தலைதூக்க முற்பட்டவேளை பிரதேச தலைவர்கள் மற்றும் பொலிஸாரின் அயராத முயற்சியினால் தடுக்கப்பட்டது. இருப்பினும் அவர்களின் மயற்சி பயனளிக்காமல் சற்று நேரத்தில் பாரிய இன கலவரத்தை உண்டாக்கிவிடுமோ என்று பிரதேசவாசிகள் கருதும் அளவுக்கு முறுகள் நிலை தொடர்ந்துள்ளது. அதன் போது இரு தரப்பிலும் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டதுடன் உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இரவு 11 மணக்கு பின்னர் பதற்றநிலை தணிந்து STF மற்றும் பொலிஸாரின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அதன்போது சுமுகநிலை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விபரம்:
4 நாட்களுக்கு முன் பெரும்பான்மை நபர் ஒருவரின் மோட்டர் சைக்கிளில் முஸ்லிம் சிறுமி ஒருவர் மோதுண்டதால் அந்நபர் போலிசாரால் கைது செய்யபட்டு பின்னர் நேற்று (16) விடுதலை செய்யபட்டுள்ளார். 
அதேவேளை விதானகொட பகுதிக்கு விளையாட சென்று திரும்பிய முஸ்லிம் இளைஞர்கள் சிலர் மீது தாக்குதல் நடத்தபட்டுள்ளது. இதில் இருவர் காயமடைந்து கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து நேற்று மாலை முதல் அப்பகுதியில் சிறு பதற்றநிலை உருவாகி வருகிறது!
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

Paid Ad

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved