புலமைப் பரிசில் பரீட்சை இலக்கமே சகல பரீட்சைகளுக்கும் - புதிய முறைமை அறிமுகம்

ஒரே பரீட்சை இலக்கத்துடன் நாட்டில் நடைபெறும் அரச பரீட்சைகள் அனைத்திலும் ஒரு பரீட்சார்த்தி தோற்றும் முறைமையை அறிமுகம் செய்யவுள்ளதாக புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பீ. சனத் புஜித தெரிவித்துள்ளார்.
இதன்படி, தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் ஒரு மாணவர் பெறும் பரீட்சை சுட்டிலக்கத்தையே  ஏனைய சகல பரீட்சைகளுக்கும் பயன்படுத்த முடியும். இதனால், ஒரு இலக்கத்தின் கீழ் ஒருவரின் சகல பரீட்சைகள் பற்றிய தகவல்களும் கிடைக்கப் பெறும் எனவும் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.
குறிப்பு
5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை எழுதாதவர்களின் நிலை பற்றி ஆணையாளரின் அறிவித்தலில் குறிப்பிடப்படாமை மிகுந்த கவலையளிக்கின்றது.
வயது வித்தியாசம் அல்லது தனியார் பாடசாலையில் கற்பது போன்ற காணங்களால் புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்ற முடியாமல் போவோருக்கு, குறித்த இலக்த்தை பெற்றுக் கொள்தற்கான வழிமுறையையும் சேர்த்து இவ் அறிவித்தலை வெளியிடுவது குறித்து கவனமெடுக்குமாறு வினயமாக கேட்டுக்கொள்கின்றோம்.
எம்.எஸ் முஹம்மது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.