Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

இலங்கை பொலிஸார் அதிரடி - நாடு முழுவதும் 1,806 பேர் கைது

Bublished By Online Ceylon on Monday, November 13, 2017 | 6:36 AM



வெள்ளிக்கிழமை நள்ளிரவில், நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில், குறைந்தது 1,806 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர, இது தொடர்பான நடவடிக்கை, வெள்ளிக்கிழமை இரவு 11 மணி முதல் சனிக்கிழமை அதிகாலை 3 மணிவரை இடம்பெற்றது எனத் தெரிவித்தார்.
பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்பின் பேரில் இடம்பெற்ற இந்நடவடிக்கையில், 16,000க்கும் மேற்பட்ட பொலிஸார் பங்குபற்றினர்.  
சந்தேகத்துக்கிடமான நடவடிக்கைகள் காரணமாக 962 பேர் கைதானதோடு, பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 758 பேரும், பல்வேறான குற்றச்சாட்டுகள் தொடர்பில் தேடப்பட்டுவந்த வேறு 86 சந்தேகநபர்களும், இதன்போது கைதுசெய்யப்பட்டனர்.  
இந்நடவடிக்கையின் போது, சட்டவிரோத மருந்துகள், மதுபானம் தொடர்பில், 948 தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதோடு, 3 ஆயுதங்களும், இதன்போது கண்டுபிடிக்கப்பட்டன.  
இதைத் தவிர, போக்குவரத்துக் குற்றங்களுக்காக, 5,744 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.   
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved