Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

ஜனவரியில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் - தேர்தல்கள் ஆணையகம் அறிவிப்பு

Bublished By Online Ceylon on Thursday, November 2, 2017 | 4:10 AM

இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலினை நடத்துவதற்கான காலத்தை தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
இதன்படி எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஜனவரி மாதத்தின் 20ஆம் திகதியிலிருந்து 31ஆம் திகதிக்குள் குறித்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்று நம்பப்படுகிறது.
குறித்த காலத்தில் ஏதாவது உள்ளூராட்சி மன்றங்களில் பிரச்சினைகள் தொடர்ந்தும் காணப்படுமாயின் அவற்றைத் தவிர்த்து தேர்தல் நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா இன்றையதினம் உள்ளூராட்சி மன்ற வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திட்டார்.
குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதும் மேலதிக நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணையாளர் எடுப்பார் என மேற்படி அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved