Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

20 ஓவர் போட்டியில் கம்ரான் அக்மல் - சல்மான் பட் ஜோடி சாதனை

Bublished By Online Ceylon on Sunday, November 26, 2017 | 3:20 PM

பாகிஸ்தானில் ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் 20 ஓவர் தொடரில், லாகூர் ஒயிட்ஸ் அணிக்காக கம்ரான் அக்மல், சல்மான் பட் விளையாடினர். இஸ்லாமாபாத் அணிக்கு எதிராக களம் இறங்கிய இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 209 ரன்கள் குவித்தனர். இதன் மூலமாக கடந்த ஆகஸ்ட் மாதம் கெண்ட் அணியின் ஜோ டென்லி மற்றும் டேனியல் பெல்-ட்ரம்மண்ட் இணை குவித்த 207 ரன்கள் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

அதிரடியில் வெளுத்து வாங்கிய கம்ரான் அக்மல் 71 பந்துகளில், 12 சிக்சர்கள் மற்றும் 14 பவுண்டரிகளுடன் 150 ரன்கள் குவித்தார். சல்மான் பட் 49 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார்.

பின்னர், ஆடிய இஸ்லாமாபாத் அணி 100 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சர்வதேச  20 ஓவர் போட்டியில், இந்தியாவின் ரோஹித் சர்மா, ஷிகர் தவான் இணை முதல் விக்கெட்டுக்கு குவித்த 158 ஒட்டங்களே சாதனையாக உள்ளது.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

Paid Ad

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved