Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

காதலிப்பதாக ஏமாற்றி 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் - திகிலூட்டும் சம்பவம்

Published on Tuesday, November 28, 2017 | 6:57 AM

பிரித்தானியாவில் காதலிப்பதாக கூறி ஏமாற்றி 15 வயது சிறுமியை தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் ட்ரெண்ட் கிரவுன் நீதிமன்றம் இந்த தீர்ப்பை 28 வயதான ஜோர்டான் வில்லியம்ஸ் என்பவருக்கு வழங்கியுள்ளது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள வில்லியம்ஸ், பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை சமூக வலைதளம் வாயிலாக சந்தித்துள்ளார்.
மட்டுமின்றி பல நாட்கள் பேசிப்பழலிய அவரை நேரிடையாக சந்திக்கும் பொருட்டு கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில் இருந்து 60 மைல்கள் தொலைவில் தமது பெற்றோரின் கேரவன் வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளார்.
அந்த வாகனத்தில் வைத்தே 3-வது முறை சந்திக்கும் போது குறித்த சிறுமியுடன் உறவில் ஏற்பட்டுள்ளார். சிறுமி தமது பெற்றோரிடன் தோழி ஒருவரின் வீட்டில் தங்குவதாக பொய் கூறியுள்ளார்.
இது பல முறை நடைபெற்று வந்த நிலையில் சிறுமியின் கைவசம் இருந்த புகைப்படத்தால் பெற்றோருக்கு சந்தேகம் எழவே, அவர்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிசார் வில்லியம்சை கைது செய்யும் முன்னர் சிறுமியின் மொபைல் போனை கைப்பற்றியுள்ளனர்.
அதில் பதிவாகியிருந்த இவர்கள் இருவரின் உரையாடல் மிகவும் ஆபாசம் மிகுந்ததாக இருந்தது என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள வில்லியம்ஸ் ஏற்கெனவே 18 வயதுக்கு கீழ் உள்ள இரண்டு சிறுமிகளுடன் தகாத உறவு வைத்துக் கொண்டதாக கூறி கைது செய்யப்பட்டு பிணையில் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved