Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

மதுவரித்திணைக்கள உத்தியோகத்தர் கஞ்சாவுடன் கைது

Bublished By Online Ceylon on Monday, November 13, 2017 | 7:21 AM

ஒரு கிலோகிராம் கேரளக் கஞ்சாவை கடத்திய மதுவரி திணைக்கள அதிகாரி ஒருவர் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சி தெரிவித்துள்ளார்.
மாவட்ட பொலிஸ் அத்தியட்சர் கீர்த்தி ரத்னவின் பணிப்புரையின் பேரில் நேற்றைய தினம்(11) பிற்பகல் மோட்டார் சைக்கிள் மூலம் போதைப்பொருளை கடத்த முற்பட்ட போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர்(வயது25), மதுவரி திணைக்கள மட்டக்களப்பு தலைமையத்தில் பணிபுரிபவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைதான அந்நபரிடமிருந்து ஒரு தொகை பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved