அரங்வல அமித தேரர் குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகளினால் கைது

ஹம்பாந்தோட்டயில் கடந்த ஒக்டோபர் 6 ஆம் திகதி நடைபெற்ற எதிர்ப்பு  நடவடிக்கையின் போது நீதிமன்ற உத்தரவை மீறியமை தொடர்பில் கைது செய்யப்படவிருந்த அரங்வல அமித தேரரை வீரகெட்டிய மெதமுலன கிங்சிகுனே ஸ்ரீ பிம்பாராம விகாரையில் வைத்து தங்கல்ல தொகுதி குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (15) நண்பகல் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான தேரரை ஹம்பாந்தோட்ட மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான தேரர் செயற்பட்ட விதம் பற்றிய வீடியோ காட்சிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரேயே நீதிமன்றம் அவரைக் கைது செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவைப் பிறப்பித்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.