ஐவேளை தொழுவதால், மனம் தூய்மை அடைகிறது - A.R ரஹ்மான்

கேள்வி : சிகரெட், மது, பெண் குற்றச்சாட்டு போன்றவை உங்களிடம் இல்லை. மன இச்சைகளை எப்படி கட்டுப்படுத்துகிறீர்கள் ?

தினமும் ஐவேளை தொழுது ஆன்மீகத்தோடு இருப்பதால் கெட்ட எண்ணங்கள் வெளியேறி மனம் தூய்மை அடைகிறது. குர்ஆன் ஹதீஸ் படிப்பது பெரிதல்ல அதன்படி நாம் வாழ வேண்டும். நபிகள் நாயகம் அதுப்போல் வாழ்ந்து காட்டினார்கள். நாமும் அதுப்போல் ஒழுக்கத்தோடு வாழ வேண்டும்.

கேள்வி : நீங்கள் உங்கள் வாழ்கையில் யாரை சந்திக்க விரும்புகிறீர்கள் ?

பதில் : இயேசுவின் (ஈசா நபி) வருகை. அவரை பார்த்து அவருடைய அன்பை பெற விரும்புகிறேன்.

கேள்வி : அல்லாஹ் ரக்கா ரஹ்மான் (A.R.ரஹ்மான்) என்ற பெயரை உங்களுக்கு சூட்டியது யார் ?

பதில் : என் தாயின் கனவில் உதித்த பெயர்.

கேள்வி : A.R.ரஹ்மான் என்றால் மக்கள் உங்களை எப்படி நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்கள் ?

பதில் : அதுபோன்ற ஆசையே இல்லை. இருக்கும் வரை நல்லது செய்ய வேண்டும். அவ்வளவு தான்.

(தந்தி தொலைக்காட்சியில், ஒளிபரப்பான பேட்டியின் ஒரு பகுதி)

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.