Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதொரு தேவைப்பாடு எமக்கு இருக்கின்றது - பொறியியலாளர் ஷிப்லி பாறுக்.

Bublished By Online Ceylon on Wednesday, November 1, 2017 | 6:23 AMமட்டக்களப்பு மாவட்டத்தின், கல்குடாத் தொகுதியிலுள்ள வாழைச்சேனை பிரதேசமானது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய வாக்குகளை மொத்தமாக கொண்டுள்ள பிரதேசமாகும். அந்த வகையில் மாகாண சபை ஆட்சிக் காலத்தின்போது கல்குடாப் பிரதேசத்தில் எங்களால் முடியுமானளவு பல்வேறுபட்ட பாரிய அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டிருக்கின்றோம் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் எம். ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் எம். ஷிப்லி பாறூக் அவர்களின் 2017ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் நிருவாக எல்லைக்குட்பட்ட வாழைச்சேனை பிரதான வீதியில் இயங்கிவரும் சமாதானத்திற்கும். கல்விக்குமான அமைப்பிற்கு பல் நிற அச்சு இயந்திரம் (Colour Printor) 2017.10.30ஆந்திகதி - திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

சமாதானத்திற்கும். கல்விக்குமான அமைப்பின் நிருவாக சபை உறுப்பினர்களிடம் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளரும், ஸ்ரீ லங்கா ஷிபா பவுண்டேசனின் தலைவருமான பொறியியலாளர் எம். ஷிப்லி பாறூக் அவர்கள் பல் நிற அச்சு இயந்திரத்தினை கையளித்தார்.

சமாதானத்திற்கும். கல்விக்குமான அமைப்பின் தலைவர் ஜனாப். எம். தய்யுப் ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது பொறியியலாளர் ஷிப்லி பாறுக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்...

இவ்வாறான சமூகம் சார்ந்த அமைப்புக்களுக்கு நாங்கள் உதவிகளை செய்வதன் நோக்கம் அரசியல் ரீதியாக உங்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கப்பால் சமூகம் சார்ந்த விடயங்களில் தங்களை அர்ப்பணித்து செயற்படுத்திக் கொண்டிருக்கின்ற இவ்வாறான அமைப்புகள் சமூகம் சார்ந்த விடயங்களுக்கு எங்களிடம் எதனை முன்னுரிமைப்படுத்தி உதவிகளை கேட்கின்றார்களோ அவ்வாறான உதவிகளை செய்கின்றபோது நாங்கள் சென்றுபார்க்க முடியாதா எங்களுடைய செயற்பாடுகளினூடாக தொட்டுவிட முடியாத சமூகத்தினுடைய வலிகளையும், தேவைப்பாடுகளையும் நீங்கள் செய்து முடிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்தான் இவ்வாறான விடயங்களைச் செய்கின்றோம்.

அதிலும் குறிப்பாக இவ்வமைப்பானது கல்வி சார்ந்த விடயங்களில் முன்னுரிமை கொடுத்து இயங்கி வருவதுடன், வறிய குடும்பங்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் பொதுத்தேவைகள் என்று எல்லா விடயங்களிலும் தங்களை அர்ப்பணித்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

பிறைந்துறைச்சேனையை தளமாகக் கொண்டு இயங்குகின்ற சமாதானத்திற்கும். கல்விக்குமான அமைப்பினுடைய செயற்பாடுகளை அரசியல் காலங்களில் மாத்திரம் பயன்படுத்தி விட்டு ஏனைய காலங்களில் கைவிட்டுவிட்டு அவர்களை மறந்துவிட்டுச் செல்வதாக ஒரு துர்ப்பாக்கிய நிலைமையான குற்றச்சாட்டு இவ்விடத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் காலங்களில் நடைபெறவிருக்கின்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலின்போது உங்களுடைய ஆலோசனைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் என்பனவற்றை எங்களால் முடியுமானளவு உள்வாங்கி முன்னாள் முதலமைச்சர் மற்றும் கல்குடாத்தொகுதியினுடைய அமைப்பாளர் எல்லோரும் ஒன்றிணைந்ததாக செயற்பட வேண்டியதொரு தேவைப்பாடு எமக்கு இருக்கின்றது.

ஒருவரைவிட்டு ஒருவராக தனிப்பட்ட ரீதியாக முடிவுகளை மேற்கொள்கின்றபோது அந்த முடிவுகளினால் உள்ளுர்களிலும், கட்சிக்குள்ளும் பிளவுகளை கொண்டுவரக்கூடிய சாத்தியம் இருப்பதால் எல்லோரும் ஒன்றிணைந்து அதனுடைய சாதக பாதகங்களை குறிப்பாக இந்நிறுவனம் முஸ்லிம் காங்கிரஸினுடைய செயற்பாட்டினை முன்னெடுத்துச் செல்லுகின்ற ஒரு நிறுவனம் என்ற வகையில் அவர்களுக்குரிய கௌரவத்தினையும், மதிப்பினையும் தார்மீக கடமையினையும் நமது கட்சியினுடைய தலைவரினூடாக எவ்வாறு தீர்த்துக் கொள்ளலாம் என்பது பற்றி எதிர்காலத்தில் அந்நேரங்களில் தீர்மானங்களை மேற்கொள்ளலாம்.

மேலும், இந்நிறுவனமானது இப்பிரதேசத்தில் இன்னும் பலதரப்பட்ட சமூகம் சார்ந்த செயற்பாடுகளில் முன்னிற்க வேண்டுமென்றும் அவ்வாறான சந்தர்ப்பங்களில் எங்களால் இயலுமான உதவிகளை அரசாங்கத்தினூடாகவும், எங்களுடைய சொந்த நிதிகளினூடாகவும் மேற்கொள்வோம் எனவும் மேலும் எதிர்காலத்திலும் பலதரப்பட்ட அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கு அல்லாஹ் எங்களுக்கு துணை இருக்க வேண்டும் என தனது உரையில் பொறியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார். இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் ஊடகச் செயலாளரும், கல்குடாத்தொகுதி இணைப்பாளருமான எம்.ரீ. ஹைதர் அலி அவர்களும் கலந்துகொண்டார்.
நண்பர்களுக்கு பகிரவும் :

0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

தேர்தல் முடிவுகள்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

தேர்தல் முடிவுகள்

தேர்தல் முடிவுகள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved