Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

நிலுகா ராஜசேகரவுக்கு விரைவில் வீடு - சஜித்

Bublished By Online Ceylon on Wednesday, November 1, 2017 | 6:45 AM

மரதன் வீராங்கனை நிலுகா ராஜசேகரவுக்கு விரைவில் வீட்டை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, அமைச்சர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.
நேற்று அத தெரணவில் வௌியான செய்தி தொடர்பில், பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
தனக்கு வீடு வழங்குமாறு விளையாட்டு துறை அமைச்சின் ஊடாக வீடமைப்பு அமைச்சுக்கு வழங்கப்பட்ட கோரிக்கைக்கு உரிய பதில் கிடைக்கப் பெறவில்லை என, நிலுகா தரப்பில் இருந்து குற்றம்சுமத்தப்பட்டது.
இதனையடுத்து, இதற்கு பதிலளித்த அமைச்சர் சஜித் பிரேமதாஸ, இதுபோன்ற கடிதங்கள் எதுவும், விளையாட்டுத்துறை அமைச்சில் இருந்து கிடைக்கப் பெறவில்லை எனவும், எனினும், அத தெரணவால் இது பற்றி தெரியப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த விடயம் குறித்து விரைவாக ஆராய்ந்து நிலுகாவின் வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் என, கூறியுள்ளார்.
இதேவேளை, நிலுகாவின் பிரச்சினை குறித்து கலந்துரையாட, ஜனாதிபதியால் நாளை அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved