Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

நாளை வெள்ளிக் கிழமை புத்தளம் ரத்மல்யாயவில் மாபெரும் இஜ்திமா.

Bublished By Online Ceylon on Thursday, November 2, 2017 | 6:56 AM

றிப்கான் கே. சமான்.

இஸ்லாத்தை அதன் தூயவடிவில் மக்கள் மத்தியில் எடுத்துத்துறைக்கும் உன்னத பணியாக (இஜ்திமா) இஸ்லாமிய மார்க்க விளக்க மாநாடு ஒன்றை   ரத்மல்யாய ,  அல்-ஹசனாத் ஜும்ஆ பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

மேற்படி நிகழ்வு எதிர்வரும் விடுமுறை தினமான 3ஆம் திகதி வெள்ளிக்கிழமை  புத்தளம், ரத்மல்யாய பள்ளிவாசலில் அஷ்ஷெய்க் ஏ.ஜே.எம். ஷாஃபி (ஸஃதி) தலைமையில் மாலை 4:30 மணி முதல் இரவு 9:00 மணிவரை இடம்பெற உள்ளது.

இங்கு ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத்தின் முன்னாள் தலைவரும் ,  "அழைப்பு" இஸ்லாமிய மாத இதழின் முன்னாள் பிரதம ஆசிரியருமான அஷ்ஷைஃக் எம்.டீ.எம்.பர்சான், அஷ்ஷைஃக் ஏ.சீ.கே.முஹம்மத் (றஹ்மானி) மற்றும் அஷ்ஷைஃக் றஸ்மி ஷாஹித் (அமீனி) ஆகிய பேச்சாளர்கள் உரை நிகழ்த்த உள்ளனர்.

தற்கால சூழ்நிலைக்கு ஏற்ற தலைப்புகளான
"பல்லின சமுகங்களுக்கு மத்தியில் முன்மாதிரி மிக்க முஸ்லிம்"  என்ற தலைப்பிலும் "கௌள்கை உறுதியுடன் குழந்தைகளை வளர்ப்போம்" என்ற இன்னுமொறு தலைப்பிலும் மற்றும் "வழிகெட்ட ஷீயாக்களும் இலங்கையில் அதன் ஊடுருவலும்" போன்ற முக்கிய பல தலைப்புகளில் குறித்த பேச்சாளர்களால் உரைகள் நிகழ்த்தப்பட உள்ளன; இதில் பெண்களும் கலந்து கொள்ளும் வகையில்  பிரத்தியேக இட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

ஆண்கள், பெண்கள் என அனைவரும் இதில் கலந்து பயன்பெற வருமாறு  தில்லையடி , ரத்மல்யாய அல்-ஹசனாத் ஜும்ஆ பள்ளி நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளார்.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved