சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு தூக்கு தண்டணை - அரசு அதிரடி முடிவு (இதுவே சரியான தீர்வு)

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை அளிக்க மத்திய பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக சிறுமிகள் தொடர்ந்து பாலியல் வன்முறைக்கு ஆளாகி வருகின்றனர்.
தனியாக செல்லும் சிறுமிகள் மற்றும் பெண்கள குறிவைத்து இது போன்ற வன்முறைகள் அதிகமாக நடந்து வருகின்றன.
பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கும் குற்றவாளிகள் சிறிது காலத்தில் வெளியே வந்துவிடுகின்றனர்.
இதையடுத்து, பாலியல் வன்முறையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டால் இதுபோன்ற குற்றங்கள் குறையும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மத்தியப்பிரதேசத்தில் 12 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை அளிக்க மத்திய பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. அதேபோல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தாலும் தூக்கு தண்டனை எனவும் அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
இந்த சட்டம் தொடர்பாக இம்மாத தொடக்கத்தில் அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், அப்பாவி சிறார்களுக்கு எதிராக கொடூரமான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனையை விதிக்கும் வகையில் வரும் சட்டசபை கூட்டுத்தொடரில் மாநில அரசு மசோதாவை கொண்டு வருகிறது என தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து தற்போது பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை அளிக்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
பாலியல் வன்கொடுமைக்கு எதிரான மத்திய பிரதேச அரசின் இந்த சட்டத்துக்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.