Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

பிரதியமைச்சர் சுஜீவ சேனசிங்கவின் பதவி பறிபோகும் நிலை - ஜனாதிபதியை விமர்சித்ததே காரணம்

Bublished By Online Ceylon on Monday, November 27, 2017 | 7:04 AM

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கடுமையான விமர்சனத்துக்கு உட்படுத்தினாரெனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நீதி மற்றும் தொழிலுறவுகள் பிரதியமைச்சர் சுஜீவ சேனசிங்கவின், பிரதியமைச்சர் பதவியைப் பறிப்பதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாக அறியமுடிகின்றது.  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பில், தான் கடுமையான அதிருப்தி கொண்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ள இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க,
“சிலருடைய தேவைகளுக்காக, ஐக்கிய தேசியக் கட்சியின் இளம் அரசியல்வாதிகளை சின்னா பின்னமாக்குவதற்கு, ஜனாதிபதி பங்குதாரராக இருக்கக்கூடாது” என்றும் கேட்டுக்கொண்டார்.   
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில், கடந்த 21ஆம் திகதியன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டினார்.  
பிரதியமைச்சரின் குற்றச்சாட்டுத் தொடர்பில் கடும் அதிருப்தி கொண்ட, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்கள், இந்த விவகாரம் தொடர்பில், கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்துக்கும் கட்சியின் தவிசாளர் அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவின் கவனத்துக்கும் கொண்டுவந்தனர்.  
இந்நிலையிலேயே, அவருக்கு எதிராக, கட்சி மட்டத்தில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு, ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அறியமுடிகின்றது. அவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கைக்கு அழைப்பதற்கு முன்னர், பிரதியமைச்சர் பதவியை, சுஜீவ சேனசிங்கவிடமிருந்து பறிப்பதற்கும் ஆலோசிக்கப்பட்டுவருவதாக அறியமுடிகின்றது.  
பிரதியமைச்சரின் பதவியைப் பறிக்கும் அதிகாரம், ஜனாதிபதி கைகளில் இருப்பதால், ஜனாதிபதியே அதுதொடர்பில் தீர்மானமொன்றை எடுக்கவேண்டுமென, அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved