வேலை போனாலும் போராட்டம் தொடரும் - தொழிட்சங்கங்கள் அறிவிப்பு

தொழிற்சங்கங்களால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம், இன்று (11) ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், தமது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை தமது போராட்டம் தொடரும் என, அச்சங்கங்கள் தெரிவித்துள்ளன.  
மேற்படி பணிப் பகிஷ்கரிப்பானது, கடந்த 6ஆம் திகதி புதன்கிழமை நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தற்போது 8 ரயில்கள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. எனினும், நேற்று மாலை முதல், இந்த எண்ணிக்கை நான்காகக் குறைக்கப்பட்டுள்ளது.  
இதேவேளை, ரயில் சேவையானது, விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம், அத்தியாவசிய சேவையாக அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், ​சேவைக்குத் திரும்பாத ஊழியர்கள், அவர்கள் வகித்த பதவிகளிலிருந்து விலக்கப்பட்டதாகக் கருதப்படுவார்கள் என, போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, நேற்று முன்தினம் (09) அறிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே, எக்காரணம் கொண்டும், பணிப்பகிஷ்கரிப்பைக் கைவிடப்போவது இல்லையென்று சங்கங்கள் அறிவித்துள்ளன.  
இதேவேளை, ரயில்வே தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக, கடந்த நான்கு நாட்களாகவே, தண்டவாளங்கள் அனைத்தும் எவ்வித பராமரிப்பும் இன்றிக் காணப்படுகின்றன. இதனால், போராட்டத்தைக் கைவிட்டாலும், ரயில் பயணங்களை மேற்கொள்வதில் சிக்கல் நிலை ஏற்படுமென்றும், அது ஆபத்துமிக்கதாக அமையுமென்றும், தெரிவிக்கப்படுகின்றது.  
சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, 12 ரயில்வே தொழிற்சங்கள் முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத் தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.