கணவர், பிள்ளைகள் எப்போது வருவார்கள் என்ற கேள்வியுடனே 7 தாய்மார் இறந்துள்ளனர்


வவுனியா, முல்லைத்தீவு பகுதிகளில், 300 நாட்களையும் தாண்டிய நிலையில் உண்ணாவிரதம் இருக்கும் உறவுகளுக்கு, அரசாங்கம் எந்தவொரு தீர்வையும் முன்வைக்கவில்லை. அவர்களில் 7 தாய்மார் இறந்துள்ளனர்.

அவர்கள் இறக்கும்போது கூட, எனது கணவர், பிள்ளைகள் எப்போது வருவார்கள் எனும் கேள்வியுடனேயே இறந்துள்ளனர்” என, அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத் தலைவி மு.செல்வராணி கேட்டுக்கொண்டார். 

“சர்வதேச மனித உரிமைகள் தினத்தைக் கொண்டாடுவதில் அர்த்தமில்லை. நீதிகோரும் சகோதரிகளாக நாம் ஒன்றிணைவோம். பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் பொருளாதார நிலையை உயர்த்த ஏற்புடைய நடவடிக்கையை எடுங்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார். 

“இன்று அரசாங்கம், தென்பகுதியில் நடைபெறுகின்ற வெள்ளம், குப்பைமேடு போன்ற அனர்த்தங்களுக்கெல்லாம் உடனடி தீர்வைக் காணுகின்றது. ஆனால் எங்களுக்கான தீர்வை இழுத்தடிக்கின்றது. நாம் எல்லோரும் அரசாங்கத்தின் பிள்ளைகளே என்பதை அரசாங்கம் உணரவேண்டும். அடுத்த அரசாங்கம் எப்படி அமையும் என எங்களுக்கு தெரியாது. ஆகவே நல்லாட்சி அரசாங்கம், ஒரு சிறந்த தீர்வை எங்களுக்கு வழங்க வேண்டும். 

“அத்தோடு சர்வதேச சமூகமும் எங்களைக் கண்கொண்டு பார்க்க வேண்டும். அதேவேளை காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டுபிடிப்பதற்கான அலுவலகம் கொழும்பில் திறக்கப்பட்டாலும், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை” என்று, அவர் மேலும் குறிப்பிட்டார்.  

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.