93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களைப் பொறுப்பேற்கும் பணி நாளை ஆரம்பம்

கடந்த 27ம் திகதி வேட்புமனுக் கோருவதற்காக அறிவித்தல் விடுக்கப்பட்ட 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களைப் பொறுப்பேற்கும் பணி நாளை ஆரம்பமாகின்றது. 
இந்த உள்ளுராட்சி மன்றங்களுக்காக  வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் இறுதி நாள் எதிர்வரும் 14ம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் எம்.எம்.முஹமட் தெரிவித்துள்ளார். 
இதற்காக கட்டுப்பணம் செலுத்தும் பணி எதிர்வரும் 13ம் திகதி நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைகிறது. 
பல அரசியல் கட்சிகள் இந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணங்களை செலுத்தியுள்ளன என்று ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் எம்.எம்.முஹமட் தெரிவித்துள்ளார்.  

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.