க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் வாழ்த்துச் செய்திஇன்று 2017.12.12 - செவ்வாய்க்கிழமை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் அனைத்து மாணவ, மாணவிகளும் இப்பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்று க.பொ.த. உயர்தரத்திற்கு சித்தியடைய தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாளை ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையானது ஒவ்வொரு மாணவர்களின் வாழ்விலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்டமாகும். மேலும் இப்பரீட்சையானது மாணவர்களுக்கு மாத்திரமன்றி பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அவர்கள் சார்ந்த சமூகத்தின் வளர்ச்சிக்குமான ஒரு முக்கிய தருணமாக அமையவுள்ளது.

எனவே மாணவர்கள் க.பொ.த. உயர்தரத்தில் கல்விகற்க கூடிய வகையில் இப்பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று தமக்கான வெற்றிகரமான எதிர்காலம் ஒன்றினை அமைத்துக்கொள்வதோடு சமூகத்திற்கு பயனளிக்கக்கூடிய நற்பிரஜைகளாகவும் உருவாக வேண்டும்.

மேலும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் தங்களது எதிர்காலம் தொடர்பாக பல்வேறு வகையான திட்டமிடல்கள் உள்ள போதிலும் இப்பரீட்சைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி அனைத்து பாடங்களிலும் அதிதிறமை சித்தியினை பெறுவதனை மையமாகக்கொண்டு செயற்பட வேண்டும்.

எனவே நாளை நடைபெறவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையினை எவ்வித பதட்டமுமின்றி மிகவும் நிதானமான முறையில் எதிர்கொண்டு சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்வதனூடாக எமது சமூகம் எதிர்கால கல்விச் சமூகமாக மாற்றமடைய பிராத்திக்கின்றேன் என தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.