இளவரசர் பின் ஸல்மானின் அடுத்த ஒஃபர் - சவுதியில் 2018 முதல் சினிமாவுக்கு அனுமதி

ஆபாசம் மற்றும் பல தவறான பல விவகாரங்களை மக்கள் மன்றில் சாதாரண ஒன்றாக சித்தரித்து குறித்த தவறுகளை செய்யத் தூண்டும் சினிமாவுக்கு அனைத்து முஸ்லிம் அறிஞர்களும் மதத் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் வளைகுடா நாடான, சவுதி அரேபியாவில், சினிமா திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது . '2018 மார்ச் முதல், திரைப்படங்கள் ஒளிபரப்பாகும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

முஸ்லிம் நாடான, சவுதி அரேபியாவில், இஸ்லாமிய மார்க்க சட்டங்களின் அடிப்படையில் பல விடயங்களில் கட்டுப்பாடுகள் நிலைநாட்டப்பட்டு வருவதும் குறிப்பிடத் தக்கது. சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசராக, முஹம்மது பின் சல்மான், 32, பதவியேற்ற பின், நடைமுறையில் இருந்த பல சட்டங்களில் தளர்வுகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. 2018 ஜூன் முதல், பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இதைத் தொடர்ந்து, கலாசார நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. சமீபத்தில், தேசிய தினத்தில், ஆண்களும், பெண்களும் இணைந்து பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், 35 ஆண்டுகளாக தடை செய்யப்பட்டிருந்த, சினிமா ஒளிபரப்புக்கு, மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2018 மார்ச் முதல், படங்கள் திரையிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

-Ubaidhullah

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.