உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தேர்தல் சட்டங்கள் அமுலில்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தேர்தல் சட்டங்கள் நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகரதெரிவித்துள்ளார். பொதுமக்களின் வாக்குரிமையை பாதுகாக்க பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். 
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இது தொடர்பாக மேலும் தொவிக்கையில் தேர்தல் சட்டங்களைமீறுவோருக்கு எதிராக கடுமையான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார். 
 கூட்டங்கள் இடம்பெறும் வளாகத்தில் மாத்திரம் ஒலிபெருக்கியை பயன்படுத்த முடியும். சாதாரண தர பரீட்சைக்கு தடை ஏற்படுத்தும் பிரச்சாரபணிகளை மேற்கொள்ள இடமளிக்கப்பட மாட்டாது என்றும் பொலிஸ்ஊடகப்பேச்சாளர் கூறினார். 
 தேர்தல் சட்டத்தை அமுல்படுத்துவதற்காக ஆயிரம் பொலிஸ் அதிகாரிகள்ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். கூட்டங்கள் இடம்பெறும் வளாகத்தில் மாத்திரம் ஒலிபெருக்கியைபயன்படுத்த முடியும. இதற்கான கால எல்லை திங்கட்கிழமை முதல்வியாழக்கிழமை வரையில் காலை 6 மணி தொடக்கம் இரவு 10 மணிவரையும்வெள்ளி மற்றம் சனிக்கிழமைகளில் காலை 6 மணி முதல் அதகாலை 1 மணிவரை மாத்திரமே பயன்படுத்த முடியும். ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி தொடக்கம் நள்ளிரவு 12 மணிவரைமாத்திரமே பயன்படுத்த முடியும். இரண்டு கட்டங்களின் கீழ் வேட்புமனுக்கள்ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. முதலாம் கட்ட வேட்புமனுக்கள் இன்று முதல்எதிர்வரும் 14ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது. 
 21 மாவட்டங்களில் 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை பொறுப்பேற்கும் பணி இன்று ஆரம்பமானது இரண்டாம் கட்டமாக 248உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் இம்மாதம் 18 ஆம் திகதிஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. எதிர்வரும் 21ம் திகதி நள்ளிரவு வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.பொலிஸ் தேர்தல் அலுவலகம் பொலிஸ் தலைமையகத்தில்அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக தொகுதிகளில் 42 அலுவலகங்களும் அமைந்துள்ளன.
வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதியன்றோ அந்தக்காலப்பகுதியிலோ பேரணிகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

MN

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.