பிரபாகரனிடம் மண்டியிடாத நான், சமகால அரசாங்கத்திடம் மண்யிடப் போவதில்லை - மஹிந்த

இலங்கையின் சமகால அரசாங்கத்திடம் மண்யிடப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பதுளை வின்சன்ட் டயஸ் மைதானத்தில் இன்று -04- மாலை பொதுஜன பெரமுனவின் முதலாவது கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மஹிந்த இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் மண்டியிடாத நான், சமகால அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் முன்னிலையில் மண்யிடப் போவதில்லை என மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் கடும்போக்கு மற்றும் அதிகார போதையில் செயற்படுகிறது. அவ்வாறு செயற்பட வேண்டாம் என ஆலோசனை வழங்கியுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில், கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.