நாளை பணிக்கு வராதவர்கள் சேவையிலிருந்து நீக்கப்பட்டதாக கருதப்படுவர்

ஆட்சேர்ப்பு முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 6 ஆம் திகதியிலிருந்து பணிப்புறக்கணில் ஈடுபட்டிருக்கும் ரயில் ஊழியர்கள் நாளை திங்கட்கிழமை பணிக்கு திரும்பாவிடின் பணியிலிருந்து நீக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்து.
ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக ஜனாதிபதியால் வர்த்தமானியில் கையொப்பமிட்டு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையால் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருக்கும் ரயில் ஊழியர்களுக்கு நாளை வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.. பணிக்கு திரும்பாவிடின் பணியிலிருந்து விலகியதாக கருதப்படுவர் எனவும் வெற்றிடம் நிலவும் இடங்களுக்கு புதிய பணியாளர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ரயில் சேவையாளர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இடம்பெற்றது. எனினும் இதில் பிரச்சினைகள் தீர்க்கப்படாத நிலையில் போராட்டம் தொடர்கின்றது.
எவ்வாறெனினும் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும்வரை தம்மால் முன்னெடுக்கப்படுகின்ற பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.