சாதாரண தர பரீட்சை 12 ம் திகதி ஆரம்பம் - கருத்தரங்கு, மேலதிக வகுப்புகளுக்கு தடை

க.பொ.த. சாதாரண தர பரீட்சை டிசம்பர் மாதம் 12ம் திகதி முதல் 21ம் திகதி வரை இடம்பெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
5116 பரீட்சை நிலையங்களில் 688,578 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு முகங்கொடுக்கவுள்ளனர்.
இதேவேளை, பரீட்சைக்கான கருத்தரங்குகள் மற்றும் மேலதிக வகுப்புக்கள் இன்று முதல் பரீட்சை முடியும் வரை தடை செய்யப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த காலப்பகுதியில் எதிர்பார்ப்பு வினாக்கள் அச்சிடுவது, வினாக்கள் தொடர்பில் கலந்துரையாடுவது ஆகிய நடவடிக்கைகளும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்த சட்டங்களை மீறப்படுமானால்;
பொலிஸ் தலைமையகம் – 011 242 11 11

பொலிஸ் அவசர அழைப்பு இல. – 119
பரிட்சைகள் திணைக்களம் – 1911
பாடசாலை பரிட்சை ஏற்பாட்டுக் கிளை – 011 278 42 08/ 011 278 45 37

எனும் இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.