டிசம்பர் 6: பாபர் மஸ்ஜித் இடிப்பு நாள் - இன்று தமிழகத்தில் விமானநிலையங்கள் முற்றுகை

இந்த ஆண்டு டிசம்பர் 6 போராட்டத்திற்கு அகில இந்திய அளவில் பல்வேறு முஸ்லிம் இயக்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. தமிழகத்திலும் பல்வேறு முஸ்லிம் இயக்கங்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. 
அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமுமுக அறிவித்துள்ளது.
அனைத்து மாட்டங்களிலும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று மனிதநேய ஜனநாயக கட்சி அறிவித்துள்ளது. 
அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அறிவித்துள்ளது.
விமான நிலையங்களை முற்றுகையிடுவதாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது. 
1992 டிசம்பர் 6 அயோத்தியிலுள்ள பாபர் மஸ்ஜிதை பாஜக பயங்கரவாதிகள் இடித்து தரைமட்டமாக்கினர்.
அனைவரும் திரண்டு வாருங்கள் என்று முன் கூட்டியே பகிரங்கமாக அழைப்பு விடுத்து...
மத்திய அரசு, மாநில அரசு, ராணுவம், காவல்துறை, நீதித்துறை, ஊடகத்துறை உள்ளிட்ட நாட்டின் அத்துனை துறைகளும் பார்க்கும்போது பள்ளிவாசலை பாஜக பயங்கரவாதிகள் இடித்து நொறுக்கினர்.
எங்களால் உங்களது பள்ளியை காப்பாற்ற முடியாது. உங்களது பள்ளியை நீங்களே காப்பாற்றிக்கொள்ளுங்கள் என்று மத்திய அரசு கூறியிருந்தால் 25 கோடி முஸ்லிம்களும் அயோத்தியை முற்றுகையிட்டு தங்களது உயிரை தியாகம் செய்து இறைவனின் ஆலயத்தை பாதுகாத்திருப்பார்கள்.
முதுகெலும்பு இல்லாத காங்கிரஸை முஸ்லிம்கள் நம்பியதால் முஸ்லிம்கள் பள்ளிவாசலை இழந்தார்கள்.
பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டு 8 மணி நேரம் பிரதமர் நரசிம்மராவ் எங்கே இருந்தார் என்பது கூட தெரியவில்லை. 8 மணி நேரம் கழித்து வந்த பிரதமர் மீண்டும் பாபர் மஸ்ஜித் அதே இடத்தில் கட்டி தரப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். 
பிரதமரின் வாக்குறுதியை நம்பி முஸ்லிம்கள் அமைதி காத்தனர். 25 ஆண்டுகள் ஆகியும் பாபர் மஸ்ஜித் இடம் முஸ்லிம்களுக்கு ஒப்படைக்கப்படவில்லை.
பாபர் மஸ்ஜிதை கட்டிக்கொடுங்கள் என்று கேட்கவில்லை. எங்களுடைய இடத்தை எங்களிடம் கொடுத்து விடுங்கள். ஒவ்வொரு முஸ்லிமும் ஒரு ரூபாய் போட்டாலாவது 25 கோடி முஸ்லிம்களும் 25 கோடி ரூபாய் போட்டு பிரம்மாண்டமான பள்ளிவாசலை கட்டிக்கொள்கிறோம்.
பாபர் மஸ்ஜித் இடத்தை முஸ்லிம்களிடம் விரைந்து ஒப்படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு முஸ்லிம் இயக்கங்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

இடித்தோர் எண்ணம் கருக !!
இடிகளே திரண்டு வருக !!

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.