Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

மிரட்டல் விடும் ஜப்னா மின்னல் செய்தித் தளத்தின் செய்திக்கான மறுப்பு

Published on Sunday, December 10, 2017 | 10:26 PM

கடந்த 06.12.2017 அன்று எமது யாழ் செய்தியாளர் ஒருவரால் எமது தளத்திற்கு ஆதாரபூர்வமாக அனுப்பப்பட்ட செய்தி ஒன்றை பதிவிட்டிருந்தோம். 
இதோ அந்த செய்தி Click
குறித்த செய்தியை மையமாக வைத்து எமக்கு ஈமெய்ல் வழியாக பதில் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது.
இது தான் அந்த பதில்
இவர்களின் கோரிக்கையை ஏற்று மிக அழகிய முறையில் நடந்து கொல்லலாம் என்று எமது ஆசிரியர் குழு முடிவுசெய்திருந்த வேலையில்,  ஆதாரங்களை முன்வைக்கவேண்டிய குறித்த நபர் தனக்கு சொந்தமான http://www.jaffnaminnal.com/ தளத்தில் வேறொருவரைப் போன்று எமக்கெதிரான பதிவொன்றை வெளியிட்டுள்ளார். எனவே இதுபற்றி எமது செய்தியாளரிடம் உரையாடிய போது, தான் அனுப்பிவைத்த செய்திக்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாலும் அவர்கள் இது வரை ஆதாரங்கள் என எதையும் முன்வைக்கததாலும் இது பற்றி அலட்டிக்கொல்லத் தேவையில்லை என்று சொல்லி ஒரு பதிலை அனுப்பிவைத்துள்ளார். அதை இங்கு பிரசுரிக்கின்றோம்.
நன்றி,
பிரதம ஆசிரியர்

ஐயா தங்கராஸா சாமிலான் அவர்களே!
உங்கள் அரசியல் பலத்தை பயன்படுத்தி உங்கள் நண்பரை காப்பாற்றிவிட்டதாகத் தான் செய்தி வெளியிட்டுள்ளோம். தாங்கள் அதை மறுப்பதாக இருந்தால் அதற்கான ஆதாரங்களைத் தான் முன்வைக்க வேண்டும். அதைத் தான் தெளிவாக ஒற்றை வரியில் ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.. உங்களுக்கு அரசியல் பின்புலம் இருக்கலாம். உங்கள் கைவசம் ஒன்றுக்கு மூன்று இணையத் தளங்கள் இருக்கலாம். அதனால் நடந்த ஒன்றை நடக்காதது போன்று சித்தரிக்க முனைவது பாரிய தவறு மட்டுமல்ல. பெரும் மோசடியும் கூட....

மகேந்திரம் பிரதிஸ் குறித்த தினத்தில் போதையில் இருந்தது உண்மைக்கு புறம்பானதா?
வீதியில் சென்ற எவருக்கும் அவர்  அன்று தொல்லை கொடுக்கவில்லையா?
தொலைபேசியை கொள்ளையடிக்கவில்லையா?
தொலைபேசியை மீட்க வந்தவரை  தாக்கி மின்கம்பத்தில் கட்டவில்லையா?
தாக்குதல் சம்பவத்தின் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லையா?
இவருக்கு எதிராக எந்த முறைப்பாடும் பொலிஸ் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்டதில்லையா?

இத்தனையையும் செய்துவிட்டு தலைகீழாக பிரச்சினையை மாற்றியுள்ளீர் என்பதே  தகவல்.

இந்த செய்தியை வெளியிட்ட இணையத்தளம் பதிவுசெய்யப்படாத இணையத் தளம் என்பதை மிகைப்படுத்துவதாலோ (பதிவு செய்யப்பட்ட பல இணையங்கள் உங்களையும் உங்கள் சார்ந்தவர்களையும் பற்றிய செய்திகளை வெளியட மறுக்கிறார்கள் என்பது இன்னுமொரு தகவல். மீடியா தர்மத்தை முதலில் அவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதே சிறந்தது.)
நான் எது நடந்ததாக சுட்டிக் காட்டியுள்ளேனோ அதை மறைத்து பொய்யான தகவலை மீண்டும் மீண்டும் பதிவிடுவதாலோ நடந்தது நடக்கவில்லை என்றாகாது. இனிமேலும் அநியாயதத்திற்கு துணைபோகாமல் என்றும் தர்மத்தை நிலைநாட்ட உங்கள் மீடியாக்களையும் அரசியல் செல்வாக்கினையும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

யாழ் செய்தியாளர்
ஒன்லைன் சிலோன்
நண்பர்களுக்கு பகிரவும் :

0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved