முச்சக்கர வண்டி ஒன்றில் வந்த ஒருவரே இந்த தாக்குதலை நடத்தி இருக்கின்றார். இதேவளை இந்த தாக்குதலை சாவகச்சேரியில் இயங்கும் அஜித்குழு என்ற குழுவே மேற்கொண்டிருப்பதாக சாவகச்சேரி பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதன்படி சந்தேகநபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த குழுவை வடக்கு மாகாணசபையின் அப்புகாகத்து உறுப்பினரும் தென்மராட்சியின் சண்டியனுமான ஒருவரது பின்னணியில் இயக்கப்படுவதாக தென்மராட்சி மக்கள் பேசிக்கொள்வதை அறியமுடிகின்றது.
குறித்த உறுப்பினரது பின்னணியில் சில மாதங்களுக்கு முன்னர் சாவகச்சேரி வைத்தியசாலை வளாகத்தில் வாள்வெட்டு குழு வெறித்தனமாக ஒருவரை வெட்டிக்கொன்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் குறித்த உருப்பினர் 'கேசவன் சஜந்தன்' எனவும் சந்தேகிக்கப்படுகிறது.