புதிய தகவல்களை உள்ளடக்கி கிராம எல்லை வரைபடம் தயாரிப்பு

புதிய தகவல்களை உள்ளடக்கி இலங்கையின் கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகள் தொடர்பான கிராமங்களின் அட்டவணையை தயாரிப்பதற்கு அரச நிலஅளவையாளர் திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
கடந்த காலப்பகுதியில் கிராமம் நகரம் மற்றும் வீதிகள் பல புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இவை அரசாங்கத்தினால் வர்த்தகமானியின் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான இடங்களின் பெயர் பூகோள ரீதியிலான அறிகுறிகள் குறித்த குறியீடுகள் கொண்டதாக புதிய கிராம உத்தியோகத்தர் பெயர்ப்பட்டியில் அட்டவணை தயாரிக்கப்படுவதாக அரசாங்க நில அளவையாளர் நாயகம் பிஎம்பி உதயகாந்த தெரிவித்துள்ளார்.
இந்த பணியில் பிரதேச செயலாளர்கள் கிராம உத்தியோகத்தர்கள், மதத்தலைவர்கள் பாடசாலை அதிபர்கள் ஆகியோருடன் கலந்துரையாடல் மேற்கொண்டு தகவல்கள் பெறப்பட்டுள்ளன.
முதலில் இந்த தகவல்களை உள்ளடக்கியதாக டிஜிட்டல் வரைபடம் தயாரிக்கப்படும். அதனைத்தொடர்ந்து இது குறித்து பொதுமக்களின் கருத்துக்களும் கேட்டுக்கொள்ளப்படும் என்று நிலஅளவையாளரின் நாயகம் தெரிவித்தார்.
புதிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உள்ளடக்கப்படும் கிராமங்களின் பெயர் திணைக்களத்தினால் தயாரிக்கப்படும் ஏனைய வரைபடங்களுக்காக பயன்படுத்தமுடியும்.
இறுதி வரைபடம் தயாரிக்கப்பட்டு நிலஅளவையாளர் திணைக்களத்தில் சேர்க்கப்படுவதுடன் பின்னர் அதனை அச்சிட்டு பகிரங்கப்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நில அளவையாளர் நாயகம் மேலும் எமது செய்திப்பிரிவிற்கு தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.